எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter

தத்ரூபமாக கமராவில் பதிவாகிய சூறாவளி (வீடியோ)


அமெரிக்காவில் உள்ள சிறிய நகரம் ஒன்றில் உள்ள வீட்டுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராக்களில் பதிவான அதிர்ச்சிக் காட்சிகள் தான் இவை.

ஏழு கமராக்களில் பதிவான இந்தக் காட்சிகள் அனைத்தும் பயங்கரமாக உள்ளன.

மத்திய அமெரிக்காவின் West Liberty, Kentucky என்ற இடத்தில் திடீரென ஏற்பட்ட சூறாவளிக் காட்சிகள் தான் இவை.

160mph என்ற வேகத்தில் வீசிய சூறைக் காற்றில் உண்மையாகவே நடுநடுங்கி வீட்டுக்குள் முடங்கி இருந்தனராம் குடும்பத்தினர்.

மரங்கள் எல்லாம் வேரோடு சாய்க்கப்பட்டன. வாகனங்களைக் கூட அசைத்துப் பார்த்து விட்டுச் சென்றது காற்று. எங்கே நீங்களும் பாருங்களேன்..


Sunday, March 11, 2012 |
மேலும் »

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு


லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டமை யாவரும் அறிந்ததேஇந்த நிலையில் அவரது குடும்பமே வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளது.

தற்போது லிபியாவை ஆட்சி செய்து வரும் புதிய அரசு கடாபியின் குடும்பத்தினர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது.

அரசாங்க பணத்தில் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அது லிபிய உயர் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

கடாபியின் கால்பந்து வீரரான இளையமகன் Saadi Gaddafi வடமேற்கு லண்டனின் Hampstead என்ற பிரதேசத்தில் 10 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள் பெறுமதியான ஆடம்பர பங்களாவை வாங்கி இருப்பது லிபியாவின் இடைகால அரசுக்கு உத்தியோக பூர்வமாகத் தெரிய வந்துள்ளது


எட்டு படுக்கை அறைகள், நீச்சல் குளம், தியேட்டர், பெறுமதிமிக்க மரத்தளபாடங்கள் கொண்ட அந்த வீட்டை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி Popplewell உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் செய்தியானது கடாபி மகனுக்கு பலத்த் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sunday, March 11, 2012 |
மேலும் »

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்


நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரீமா சென். இவருக்கும் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் சிவ் கரண் சிங்கிற்கும் காதல் மலர்ந்தது. 

ஒரு வருடமாக காதலித்து வந்த இந்த ஜோடிக்கு டெல்லியில் பஞ்சாபி முறைப்படி இன்று திருமணம் நடந்தது. 

இதில் இந்தி பட உலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதுபற்றி ரீமா சென் கூறும்போது, ‘இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். கடந்த ஒரு வருடத்துக்கு முன் நண்பர் மூலமாக சிவ் கரணை சந்தித்தேன். எங்களுக்குள் புரிதல் ஏற்பட்டது. வாழ்க்கை முழுவதும் இருவரும் இணைந்திருக்க முடிவு செய்தோம். இன்று திருமணம் நடக்கிறது. இதை நினைத்து எந்த பதற்றமும் இல்லை. பஞ்சாபி முறைப்படி நடக்கும் இத்திருமணத்தில் இளைஞர்களுக்கான விளையாட்டு, இரவு விருந்து நடக்கிறது. மற்றும் பல்வேறு சடங்கு, சம்பிரதாயங்களும் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு தேனிலவு செல்வது பற்றி முடிவு செய்யவில்லை. இப்போது எனக்கு இரண்டு வார ஓய்வு தேவைப்படுகிறது. 

தேனிலவு செல்வது பற்றி பின்னர் முடிவு செய்வோம். பஞ்சாபி பெண்ணான நான் இன்றுமுதல் டெல்லி பெண்ணாகிறேன். கடந்த வியாழக்கிழமைதான் எங்கள் இருவருக்கும் முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் நான் நடித்த இரண்டு இந்தி படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. திருமணத்தால் நான் நடிக்கும் படங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. தொடர்ந்து நல்ல வேடங்களில் நடிப்பேன் என்றார்.
Sunday, March 11, 2012 |
மேலும் »

கார்த்தி, ஜீவாக்கு நோ - லட்சுமிராய்


கார்த்தி படத்திலிருந்து விலகிய லட்சுமிராய், தற்போது ஜீவா நடிக்கும் படத்தில் இருந்தும் விலகியுள்ளார். ‘தாம் தூம், ‘காஞ்சனா, ‘மங்காத்தா படங்களில் நடித்திருக்கும் லட்சுமி ராய் அடுத்து கார்த்தி நடிக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதை ஏற்கவில்லை. 

தனது கேரக்டர் பிடிக்கவில்லை என்பதால் நடிக்கவில்லை என்று கூறினார். அடுத்து அஹமத் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் என்றென்றும் புன்னகை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதிலும் நடிக்க மறுத்திருக்கிறார். 

தமிழை பொறுத்தவரை புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாத லட்சுமிராய் தெலுங்கு, மலையாளம். கன்னட படங்களில் நடித்து வருகிறார். இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாக ஏற்கனவே லட்சுமிராய் கூறி வந்தார். தற்போது அனுஷ்க் பட் இயக்கும் புதிய இந்தி படத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். இதில் சச்சின் ஜோஷி, மல்லிகா ஷெராவத் ஆகியோரும் நடிக்கின்றனர். இதுபற்றி இயக்குனர் அனுஷ்க் கூறும்போது,‘லட்சுமி ராய் என்னுடைய படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டிருக்கிறேன். 

படத்தின் கதையை கூறியபோது ஆர்வமாக கேட்டார். பிறமொழியில் இப்போது பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் தனது கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து தருவதாக கூறினார். அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ளது என்றார். இந்தி பட வாய்ப்பு கிடைத்திருப்பதால்தான் தமிழ் படங்களை லட்சுமிராய் ஒதுக்குவதாக கூறப்படுகிறது. 

இது பற்றி லட்சுமிராயிடம் கேட்டபோது, 

நோ கமென்ட்ஸ் என்று மட்டும் பதில் வந்தது. அதே நேரம் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார். என்றென்றும் புன்னகை படத்தில் த்ரிஷா நடிக்கிறார். அதனால் அப்படங்களில் அவர்களுக்கே முக்கியத்துவம் இருக்கும் என்பதால் லட்சுமிராய் விலகிவிட¢டதாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.
Sunday, March 11, 2012 |
மேலும் »

நயன்தாராவுக்கு பிடித்த நிறம் கருப்பு


நடிகை நயன்தாராவுக்கு பிடித்த நிறம் கருப்பு. ஷூட்டிங் இல்லையென்றால் அம்மணி கருப்பு நிற உடைகளையே விரும்பி அணிகிறார். 

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்கிறார் நடிகை நயன்தாரா. பிரபுதேவாவுடனான திருமணம் நின்று அவரைப் பிரிந்த பிறகு நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. இத்தனை நாட்களாக சினிமாவைவிட்டு விலகியிருந்த அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர். அதனால் இனி நயன் படு பிஸி தான். 

அவருக்கு பிடித்த நிறம் கருப்பாம். படத்தில் அனைத்து காட்சிகளிலும் கருப்பு நிற உடைகளில் வரமுடியாதல்லவா அதனால் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் தனக்கு மிகவும் பிடித்த கருப்பு நிறத்தில் மட்டுமே உடையணிகிறார். இவ்வளவு ஏன் அவரது கார் கூட கருப்பு நிறம் தான். கருப்பு நிறம் மீது இவ்வளவு மோகம் ஏன் என்று கேட்டால், யார் கருப்பு நிறத்தில் உடையணிந்தாலும் அது அவர்களுக்கு அழகாக இருக்கும் என்கிறார்.

பில்லா படத்தில் கூட கருப்பு நிறத்தில் கவர்ச்சியாக உடையணிந்து கருப்பு நிற கூலிங் கிளாசில் அசத்தலாக வந்ததை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது தான்.

தற்போது நயனதாராவை பில்லா 2 படத்திலும் கெஸ்ட் ரோலிலாவது நடிக்க வைக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள் என்பது நினைவிருக்கலாம்.
Sunday, March 11, 2012 |
மேலும் »

அப்பா மீது கொலவெறியில் பானு


நடிகை பானு தனது அப்பாவைவிட்டு பிரிந்துவிட்டாராம். இனி எந்த ஜென்மத்திலும் அவருடன் பேசப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம்.

தாமிரபரணி படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் நடிகை பானு. முதல் படத்தில் கும்முனு வந்த அவர் அடுத்தடுத்த படங்களில் காற்றிறங்கிய பலூனாகி விட்டார். குறிப்பாக ஆர்கேவுடன் இணைந்து நடித்தபோது படு மெல்லிசாக காணப்பட்டார். இப்போது முன்பை விட மேலும் உடல் மெலிந்து காணப்படுகிறார். கேட்டால் டயட்டிங் என்கிறார்.

என்ன பானு உங்களை அடிக்கடி பார்க்க முடியவில்லையே என்று கேட்டால் எனக்கு கதாபாத்திரம் தான் முக்கியம். அதனால் தான் வரும் படங்களை எல்லாம் ஒப்புக் கொள்ளாமல், நல்ல கதாபாத்திரம் உள்ள கதைகளில் நடித்து வருகிறேன் என்றார்.

அம்மணி கேரளாவில் ஒரு பியூட்டி பார்லர் திறந்து அதை தனது அம்மாவின் பொறுப்பில் விட்டுள்ளார். இந்நிலையில் பானுவுக்கும் அவரது அப்பாவுக்கும் என்ன லடாயோ தெரியவில்லை தகப்பனை விட்டுப் பிரிந்துவிட்டார். இனி எந்த ஜென்மத்திலும் அவருடன் பேசவே மாட்டேன் என்கிறார். இனி எனக்கு எல்லாமே அம்மா தான் என்றும் கூறியுள்ளார்.

அப்பா மீது அப்படி என்ன கொலவெறியோ தெரியலையே...!
Sunday, March 11, 2012 |
மேலும் »

வதந்தி பரப்பும் சித்தார்த் மீது ஸ்ருதி கோபம்


தன்னை பற்றி வதந்தி பரப்புவதால் சித்தார்த் மீது கோபமாக இருக்கிறார் ஸ்ருதிஹாசன். பாய்ஸ், காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சித்தார்த். இவருடன் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். அப்போது இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. 

அடிக்கடி சந்தித்து கொண்டிருந்த இருவரும் திடீரென்று பிரிந்துவிட்டனர். அவருடன் ஜோடியாக நடிப்பதாக இருந்த தெலுங்கு படத்தில் இருந்தும் விலகிவிட்டார் ஸ்ருதி. இதுபற்றி அவர்களது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறும்போது ,‘சித்தார்த், ஸ்ருதி பிரிவு என்பது சுமுகமாக நடக்கவில்லை. இருவரும் பிரிந்த பிறகு சித்தார்த்திடம் பேசுவதை தவிர்த்துவிடுகிறார் ஸ்ருதி. இந்நிலையில் ஸ்ருதி பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறதாம். 

இதற்கு சித்தார்த்தான் காரணம் என்று நினைக்கிறார் ஸ்ருதி. மேலும் பிரிவுக்கு பிறகு நடிப்பதில் அவர் முழு கவனம் செலுத்தி வருகிறார்Õ என்றார். தன்னைப் பற்றி சித்தார்த்தான் வதந்தி பரப்புகிறார் என்று தகவல் பரவியதையடுத்து மனம் நொந்துபோனாராம் ஸ்ருதி. மன ஆறுதலுக்கு தற்போது லண்டன் சென்றிருக்கிறார் ஸ்ருதி.
Sunday, March 11, 2012 |
மேலும் »

எதிர்வரும் வெள்ளிக்கிழமை கல்முனை மாநகரில் மிகப்பிரமாண்டமான இசைநிகழ்ச்சிதுருவம் இணையத்தளம் டொப் குயின் நிறுவனத்துடன் இணைந்து நடாத்து மிகப்பிரமாண்டமான 2012 - இன்னிசை இரவு நிகழ்ச்சி கல்முனை தனியார் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள சந்தாங்கேணி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16.03.2012) நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பிற்பகல் 5 மணிக்கு இந்தியாவிலிருந்து வருகைதரும் 'கஸால்' இசைக்குழுவின் இசைநிகழ்ச்சிகள் இடம்பெறும். பிற்பகல் 6.30 வரை நடைபெறும் இந்நிகழ்வு முற்றிலும் இலவசமாக நடாத்தப்படும். இசைத்துறையில்‌ ஆர்வமுள்ள அனைத்து மாணவர்கள், இளைஞர், யுவதிகள், பெரியோர்கள் அனைவரும் இதனை நேரடியாகப் கண்டுகளிக்க முடியும். கல்முனை மாநகர முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெறும் இந்திய 'கஸால்' இசைநிகழ்ச்சிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து, இரவு 8 மணிக்கு எம்.சிவக்குமாரின் அக்னியின் இசையில் பிரபல பாடகர்கள், பாடகிகள் கலந்துகொள்ளும் அட்டகாசமாக இசைநிகழ்ச்சிகள் இடம்பெறும். நீர்கொழும்பு SEA DANCERS இசைக்குழுவின் அசத்தல் நடன நிகழ்வுகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும். இந்நிகழ்ச்சிக்கு 100 கட்டணம் செலுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.

இந்நிகழ்வுகள் பிறை எப்.எம். வானொலியில் (102 MHz)  நேரடியாக அஞ்சல் செய்யப்படும். இந்த இசை நிகழ்ச்சிக்கு 'தினக்குரல்' பத்திரிகை ஊடக அனுசரனை வழங்கிக்கொண்டிருக்கிறது.

நிகழ்ச்‌சி ஏற்பாடு : ஸ்கை எண்டர்டைமன்ட்
Sunday, March 11, 2012 |
மேலும் »

கல்முனைஅல்-பஹ்றியா மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி


(நப்றிஸ்) 
கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் எம்.எச். நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கலந்து சிறப்பித்தார்.

இப்போட்டிகளின்போது பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு, வினோத உடைப்போட்டி மற்றும் சிறுவர் நிகழ்ச்சிகளும் இங்கு இடம்பெற்றது. இந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு அதிதிகளாக கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். ஜெலீல், ஓய்வு பெற்ற விளையாட்டு உத்தியோகஸ்தர் எம்.எச். நபார், அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரி விரிவுரையாளர் மன்சூர், கல்முனை முதல்வரின் ஆலோசகர் ஏ.பீர்முஹம்மட் உட்படப்பலரும் கலந்து கொண்டனர்.
Sunday, March 11, 2012 |
மேலும் »

பலஸ்தீன் மக்களின் ரசிகன் நான் - மரடோனா


பலஸ்தீன் மக்கள் நடத்தும் போராட்டத்தை நான் மதிக்கிறேன் என்று உலகப்புகழ் பெற்ற முன்னாள் அர்ஜெண்டினா கால்பந்து விளையாட்டு வீரர் மரடோனா கூறியுள்ளார். பலஸ்தீன் மக்களின் மிகப்பெரிய ரசிகன் தான் என்று மரடோனா துபாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பலஸ்தீன்  விவகாரத்தில் மரடோனா முதன் முறையாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மரடோனா கூறியதாவது, பலஸ்தீன் போராட்டத்தை மதிப்பது எனது கருத்தாகும். இக்கருத்து எவருக்கேனும் கோபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை நான் வாபஸ் பெறமுடியாது. ஃபலஸ்தீன் மக்களுக்கு அனைவரின் ஆதரவும் தேவை. அவர்களிடம் எனக்கு மதிப்பும், அனுதாபமும் உண்டு. எனது இரண்டு வயது பேரனைப் போலவே ஃபலஸ்தீன் மக்களுக்கும் எப்பொழுதும் ஆதரவு தேவை. அநீதிக்கு எதிராக பலஸ்தீன் மக்கள் நடத்தும் போராட்டம் குறித்து எனக்கு முழுமையாக தெரியும்’ என்று மரடோனா கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பலஸ்தீனைச் சார்ந்த ஒரு ரசிகரிடம் இருந்து கறுப்பு, வெள்ளை நிறத்திலான ஸ்கார்பை மரடோனா பெற்றுக்கொண்டார். அப்பொழுது அவர் வெற்றிச் சின்னத்தை உயர்த்தி காண்பித்து ‘விவா பலஸ்தீனா’ என காமெராவுக்கு முன்னிலையில் கூறினார். பலஸ்தீனுக்கு வருவதாக அந்நாட்டின் கால்பந்து குழுவிற்கு மரடோனா உறுதி அளித்துள்ளார்.
Sunday, March 11, 2012 |
மேலும் »
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452