Published On: Monday, December 26, 2011
பேராசிரியர் அ.சண்முகதாஸின் 72ஆவது பிறந்த நாள்; இரு நூல் வெளியீடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் 72 ஆவது அகவை நிறைவையொட்டி கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய இலங்கைத் தமிழியல் - சில பதிவுகள், நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்ற நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 02.01.2012 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வரவேற்புரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசனும் ஆசியுரையை நல்லை ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் வாழ்த்துரைகளை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அதிபர் வேல். சிவானந்தன் ஆகியோரும் வழங்குவர்.