Published On: Monday, December 26, 2011
வாகனங்களில் ஆசனப்பட்டி அணியும் திட்டம் வெற்றி - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

(பஹமுன அஸாம்)
வாகனங்களில் ஆசனப்பட்டி அணியும் திட்டம் கடந்த ஓக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தினால் இன்றுவரை 1,000க்கும் மேற்பட்டோர் பிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
ஆசனப்பட்டி அணியாதோருக்கு எதிராக நேரடியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுவதால் சாரதிகள் இவ்விடயத்தில் கூடிய கவனம் எடுப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவிப்பதாக அவர் மேலும் மேலும் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் சாரதிகள் இத்திட்டத்தில் கவனம் செலுத்தாத போதும், தற்போது ஆசனப்பட்டடி அணிவதில் கூடிய கவனம் எடுப்பதாகவும் தெரிவித்தார்.