எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, January 17, 2012

2012 ஆம் ஆண்டில் உறுதியுடன் 'ஹமீடியா'

Print Friendly and PDF


2011 ஆம் ஆண்டினை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ள இலங்கையின் முன் னணி ஆண்கள் ஆடை நிறுவனமாக திகழும் ஹமீடியா, இலங்கையின் ஆண்கள் அனைவருக்குமான நவநாகரிக தீர்வுகள் வழங்குனர் என்ற தனது ஸ்தானத்தை மேலும் பலப்படுத்துவதற்காகவும் அத்துடன் ஈடினையற்ற உற்பத்திக்களை வழங்குவதன் மூலம் நாடு மற்றும் பிராந்தியம் முழுவதும் தனது பிரசன்னத்தை விஸ்தரித்துக் கொள்வதற்காகவும் புதிய பயணம் ஒன்றில் கால்பதித்துள்ளது.

இரத்மலானை, பொருப்பனவில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சர்வமத நிகழ்வுகளைத் தொடர்ந்து, பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரான ஹ¤சைன் சாதிக் மற்றும் உயர்மட்ட முகாமைத்துவ குழுவினரின் தலைமையிலான ஹமீடியா நிறுவன ஊழியர்கள் புதுவருடத்திற்கான தமது பணிகளை ஆரம்பித்தனர்.

அடிமட்டத்திலிருந்து மேல்நோக்கியதான அணுகுமுறையினை கையாண்ட முகாமைத்துவமானது, நிறுவனத்தின் தூரநோக்கு மற்றும் குறிக்கோள் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்துள்ளதுடன் தனது கூட்டாண்மை பெறுமானங்களையும் உருவாக்கியுள்ளது. இவையனைத்தும் முதலாவது வேலை நாளில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

‘ஹமீடியா, 850 அங்கத்தவர்களைக் கொண்ட மிகப் பெரியதொரு குடும்பமாகும். ஒரு குடும்பம் என்ற வகையில் அமைதியான மற்றும் புயல் வீசிய சமுத்திரங்களின் ஊடாக நாம் எமது கப்பலை செலுத்தி வந்துள்ளோம். திடசங்கற்பம் மற்றும் மன உறுதியுடன் எதிர்வருகின்ற மாதங்களை நாம் எதிர்கொள்வதன் காரணமாக, முழுமையான ஹமீடியா குடும்பத்திற்கும் சிறந்த பெறுபேறுகள் மற்றும் வெகுமதிகளை வழங்கும் வருடமாக 2012 திகழப் போகின்றது’ என்று சாதிக் தெரிவித்தார்.

ஊழியர் ஊக்குவிப்பு என்பது ஹமீடியா நிறுவனத்தின் அனைத்து ஊழியர்கள் மத்தியிலும் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றது. ஒவ்வொரு ஊழியரும் எட்டு மணித்தியால தன்னார்வ பணியினை மேற்கொள்வதன் காரணமாக, ஹமீடியா நிறுவனத்திலுள்ள உறுதிமிக்க அணியினரான 850 ஊழியர்களினாலும் ஒட்டுமொத்தமாக 6800 இற்கும் அதிகமான மணித்தியாலய சமூக சேவை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நிறுவன ஊழியர்களினால் தனிப்பட்ட ரீதியாகவும் குழுவாக ஒற்றிணைந்தும் இப்பணிகள் முன்னெடுக்கப்ப டுகின்றன. சமூகநல திட்டங்களின் பொருட்டு அவர்கள் குழு அடிப்படையில் பணியாற்றுகின்றனர். தனிப்பட்ட ரீதியில் அவர்கள் தமது அனுபவங்களை பாடசாலைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிறுவகங்களுடன் பகிர்ந்துகொள்ளுகின்றனர்.

இந்தப் பயிற்சியானது அவர்களை சுயதிருப்தியுடையவர்களாக மாற்றுகின்றது. அதன் மூலம் ஏனையவர்களில் தங்கியிருக்கும் தன்மை குறைக்கப்படுவதன் ஊடாக, அனைத்து விடயங்களும் உட்பொதிந்த சுய கெளரவத்தையும் அவர்களுக்கு அளிக்கின்றது. ஊழியர்கள், நிறுவனம் மற்றும் சமூகத்திற்கு பாரியளவில் பெறுமதி சேர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை புதுவருடம் முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

அடுத்த மாதத்தின் முற்பகுதியில் தாமரைத் தடாகம் (நெலும் பொகுண) கலையரங்கில் விருது வழங்கும் இரவுநேர நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. நிறுவனத்தின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய முன்னணி ஊழியர்களுக்கு இதன்போது விருது வழங்கி கெளரவிக்கப்படும்.

தற்போது வெளிநாட்டிலுள்ள ஹமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பெளசுல் ஹமீட் அனுப்பிவைத்துள்ள செய்தியில், ‘தற்போது எம்மிடம் காணப்படும் எமது உலகத் தரம் வாய்ந்த, பரந்துபட்டட வர்த்தக குறியீடுகள் அத்துடன் குறிப்பிட்ட அளவுக்கமைய தைக்கப்பட்ட ஆடைகள், ஆடைகளின் தொகுதி தொடர்பான ஆலோசனை, அளவெடுத்து தேவைக்கேற்ப தைத்தல் போன்ற வசதிகளை வழங்கும் வகையிலமைந்த சேவை வழங்கல் போன்றவற்றை மீள பலப்படுத்துவதற்கும், அதன் மூலம் எமது பல்லாயிரக் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சுய திருப்தியை ஏற்படுத்தும் விதத்தில் சேவையாற்றுவதற்கும் நாம் திட்டமிட்டுள்ளோம். அதிக எண்ணிக்கையான சர்வதேச வர்த்தக குறியீடுகளுடன் பிரத்தியேக உடன்படிக்கைகளை செய்து கொண்டுள்ளது.

அதற்கமைய உன்னதமான உற்பத்திகள் பலவற்றின் பிரதான விற்பனை முகவரகமாக திகழ்கின்றது. அதேவேளை வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மாதங்களில் இத்திட்டங்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஊழியர்களின் மெருகேற்றப்பட்ட பல்வகை திறமையானது நாளாந்த அடிப்படையில் நிறுவனத்தின் உள்ளே ஒளிபரப்புச் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவை விவரண செய்திகள், விஷேட தகவல்கள், இசை போன்றவையாக காணப்படும்.

இந்நிகழ்ச்சிகள் ஊழியர்களினாலேயே தொகுக்கப்பட்டு, ஒளிபரப்புச் செய்யப்படும். முதற்கட்டமாக தலைமை அலுவலகம், களஞ்சியசாலைகள் மற்றம் தொழிற்சாலையில் நடைமுறைக்கு வரும் இவ்வசதி அதனைத் தொடர்ந்து நாடெங்கிலும் காணப்படும் ஹமீடியா நிறுவனத்தின் அனைத்து காட்சியறைகளுக்கும் இவ்வருட காலப் பகுதியில் விஸ்தரிக்கப்படும்.

‘2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஊழியர்களை மையமாகக் கொண்ட எமது செயற்பாடுகளை திரும்பிப் பார்க்கையில், நிறுவனத்தின் உபாய இலக்கிற்கு அமைவாக நாம் சுயமாக பங்கேற்ற கூட்டாண்மை திட்டமிடல் அமர்வுகள் மிகவும் குறிப்பிடத் தக்கனவாக அமைந்திருந்தன என்று நான் நம்புகின்றேன். அதுமாத்திரமன்றி ஹமீடியா நிறுவன பாடசாலையும் நாம் மீள அங்குரார்ப்பணம் செய்துள்ளோம்.

ஊழியர்களுக்கான வருடாந்த சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டு அனைத்து ஊழியர்களும் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக, அஹ¤ங்கல்ல ஹெரிடென்ஸ் ஹோட்டலுக்கு சென்றிருந்தனர்’ என்று சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை முகாமையாளர் லிரோய் தெரிவித்தார்.

‘மிகச் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்திருப்பதுடன் 2012 இல் மேலும் வாய்ப்புக்களை கண்டறிந்து கொள்ளவுள்ள நாம், ஊழியர்களில் அதிக கவனம் செலுத்தவுள்ளோம். எமது ஊழியர்களை நாம் நன்றாக கவனித்துக்கொண்டால், மறுபுறத்தில் அவர்கள் எமது வாடிக்கையாளர்களை கவனிப்பார்கள் என்றும்... ஏனைய விடயங்கள் அனைத்தும் இயல்பாகவே சிறப்பாக நடைபெறும்’ என்று சாதிக் கூறி முடித்தார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452