Published On: Tuesday, January 17, 2012
"வேட்டையாடு விளையாடு" இந்தி ரீமேக்கில் நாயகனுக்கான போட்டி

கௌதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு திரைப்படத்திற்கான இந்தி ரீமேக்கில் நாயகன்களுக்கான போட்டி நிலவுகிறது.
திரையுலகில் பாலிவுட்டில் வெற்றி அடையக்கூடிய திரைப்படங்கள் தமிழிலும், தமிழில் வெற்றி அடையக்கூடிய திரைப்படங்கள் இந்தியிலும் ரீமேக் ஆகிறது.
இளையதளபதி விஜய் நடித்த காவலன் திரைப்படம் பாலிவுட்டில் பாடிகார்ட் என்ற பெயரில் திரையிடப்பட்டது.
திரையிடப்பட்ட வேகத்தில் அதிகமான வசூல் சாதனை படைத்தது. தற்போது கௌதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.
ஆனால் பாலிவுட் வேட்டையாடு விளையாட்டில் யார் நாயகனாக நடிக்க உள்ளார் என்ற போட்டி நிலவிவருகிறது.
இதற்காக பாலிவுட் நாயகன்கள் சல்மான் கான், ஷாருக்கான் போட்டியிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.