Published On: Thursday, January 26, 2012
நிந்தவூர் வெஸ்ட் ஓப் யங் சமுக சேவைகள் அமைப்பினால் கடந்த 2012.01.24ஆம் திகதி நிந்தவூர் கோட்டத்தில் உள்ள வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கம் நிகழ்வு மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகணசபை அமைச்சர் துரையப்பா நவரத்தினராஜா, கே.ஏ. றஸாக் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி றிபாயும்மா, அப்துல் ஐலில் அமைப்பின் தலைவர் ஐ.எம். இ.போ. சபையின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் எம்.என்.எச்.எம். நஸிர் ஆகியோரை படத்தில் காணலாம்.