Published On: Tuesday, January 17, 2012
நாயகி காஜல் அகர்வால் உணவு நிலையம் ஆரம்பிக்க முடிவு

தென்னிந்திய நாயகி காஜல் அகர்வால் உணவு நிலையம் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார்.
தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் முன்னிணி நாயகியாக காஜல் அகர்வால் திகழ்கிறார்.
தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து மாற்றான் திரைப்படத்திலும், முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து துப்பாக்கி படத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் காஜல் அகர்வால், சினிமாவிற்கு வந்து 5 ஆண்டுகள் கடந்து விட்டது. தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்த பிஸினஸ் மேன் படத்திற்காக பாராட்டுகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.
பாலிவுட்டில் சிங்கம் படத்தில் நடித்துள்ளதால் பாலிவுட்டிலும் எனக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் தமிழ் தெலுங்கு என்று தென்னிந்திய மொழிகளிலேயே நடிக்க விருப்பமாக உள்ளது.
மேலும் உணவு நிலையம் ஒன்று ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.