Published On: Wednesday, February 15, 2012
யாரையும் உளவு பார்க்கவில்லை; வீணா மாலிக்

பாகிஸ்தானை சேர்ந்தவர் நடிகை வீணா மாலிக். இவர் இந்திய பத்திரிகை ஒன்றுக்கு நிர்வாண போஸ் கொடுத்தார்.
நிர்வாணமாக தோன்றியபோது அவர் உடலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான `ஐ.எஸ்.ஐ.' பெயரை பச்சை குத்தி இருந்தது அம்பலமானது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வீணா மாலிக் மீது ஜாமியாநகர் மசூதி இமாம், டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஐ.எஸ்.ஐ.யின் பெயரை நடிகை பச்சை குத்தி இருப்பதால் அவர் பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு வேலை பார்க்கக்கூடும் என குற்றம் சாட்டி இருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்துமாறு போலீசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அது குறித்த அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில் நடிகை வீணா மாலிக் தன் மீது உளவு வேலை பார்ப்பதாக கூறப்படுகிற குற்றச்சாட்டை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.