Published On: Saturday, February 18, 2012
துப்பாக்கி இல்லாமல் 'ப்ரீயா' இருக்கும் விஜய்

துப்பாக்கி படம் கைவிடப்பட்டது என பல தரப்பிலும் செய்தி கிளம்பியிருப்பது விஜய்யை கடுப்பேற்றியுள்ளது. இயக்குநரும் ஒன்றும் சொல்லாமல் அமைதி காப்பதால், ஒருவேளை செய்தி உண்மைதானோ என்ற நினைப்பில் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனிடம் விசாரித்து வருகிறார்கள்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யிடம் இதுகுறித்து ரசிகர்கள் கேட்டதற்கு, "படம் ட்ராப்னு வர்ற செய்திகளை நம்பாதீங்க. சீக்கிரமே மீண்டும் தொடங்கிடும். பெப்சி பிரச்சினை போன்றவையெல்லாம் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கிடும்," என்றார் கொஞ்சம் கடுப்புடன்.
இப்போது கிடைத்துள்ள இடைவெளியும் விஜய்க்கு ரொம்ப பயனுள்ளதாக உள்ளதாம். பியூட்டி பார்லர் திறப்பு, செல்போன் கடை திறப்பு என நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்துகிறாராம். ரசிகர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கும் போக முடிவெடுத்துள்ளாராம்.