எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, February 14, 2012

காதலர் தினமும் அதற்கான எல்லையும்

Print Friendly and PDF


(இந்தியாவிலிருந்து விசாலம்) 
தந்தை தினம் வருகிறது பல பேர்களுக்கு அது வந்து போவதே தெரிவதில்லை. தாய் தினம் வருகிறது. கொஞ்சம் தொலைக்காட்சி மூலமாய் தெரிந்தாலும் "அம்மாவென்றழைக்காத உயிரில்லையே" என்பது போல் ஒரிரண்டு பாட்டுக்களுடன் முடிவடைகின்றன. நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரையும் அர்ப்பித்த பல தியாகிகளின் பிறந்த நாட்கள் பலருக்கு நினைவு வருவதில்லை. ஆனால், இந்தக் காதலர் தினம் மட்டும் பத்து நாட்கள் முன்பாகவே சூடு பிடிக்கத் தொடங்கி ஒரு கலக்கல் கலக்கி விடுகிறது. ஏழு வயது சிறுவனும் கூட இதைப்பற்றித் தெரிந்து வைத்திருக்கிறான்.

ஒரு கடைப்பக்கம் நான் போனபோது ஒரு சிறுமி தன் தாயிடம் தனக்கு ஒரு பெல்ட் வாங்கும்படி அடம் பிடித்தாள். "உனக்கு எதற்கு பெல்ட்? உன் பிட்ரெஸ்ஸுக்கு பெல்ட் எப்படி தேவையா என்ன?" என்று அவள் அம்மா கேட்டபோது "எனக்கில்லையம்மா என் பாய் பிரண்டுக்கு... காதலர் தினத்தில் கொடுக்கணும்" என்றாள். அன்புடன் பரிசு கொடுப்பதில்லை தவறொன்றுமில்லை ஆனாலும் ஒரு வரையரை மீற அங்கு அமிருதமும் விஷமாகிவிடுகிறது. சிறுமியைச் சொல்லிக் குற்றமில்லை. அவள் வளரும் சூழ்நிலை அவளைச் சுற்றியிருக்கும் சூழ்நிலை எல்லாம் சேர்ந்து இது போன்ற நிலை உண்டாகிறது. 

நம் நாடு பெற்றோர்களைத் தெய்வமாக மதிக்கும் நாடு தாய் தந்தையைப் பராமரித்து கடைசிவரை அவர்களைப் பாசத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டியது மக்களின் கடமை. ஆகையால் தனியாக தாய், தந்தை தினம் தேவையே இல்லை. நம் மனத்தில் தினமும் அவர்கள் குடியிருக்கிறார்கள். மேல் நாட்டினிலே மகன், மகள் 16 வயது வந்தால் தனியாக குடிபோகிறார்கள். அவர்கள் சுதந்திரத்தில் ஒருவரும் தலையிடுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆகையால் இந்தத் தந்தை தினம், தாய் தினம் என்று அவர்களுக்காக ஒரு நாள் ஒதுக்குகிறார்கள்.

இப்போது காதலர் தினம் நம் முன்னால் வருகிறது. நம் நாட்டுக் கலாசாரம் காதலைப் புனிதமாக மதிக்கிறது. இலை மறைவு தலை மறைவு என்பார்கள். நான் பாரீஸ் போனபோது அங்கு தினமும் காதலர் தினமாகத்தான் இருந்தது. எவ்வளவு விரசமானக் காட்சிகள். நான் தான் என் திசையைத் திருப்பிக் கொண்டேன். ஒரு பத்து வருடங்களாகத்தான் இந்தக்காதலர் தினம் பிரபலமாகிவிட்டது. காதலர் தினத்தை நான் வரவேற்கிறேன். ஆனால், அதை ஆரோக்கியமாக உண்மையான அன்பை தன்னலமில்லாத அன்பைச்செலுத்தி கொண்டாட அதைவிடச் சிறந்தது வேறில்லை.

இத்தினம் அன்பை வெளிப்படுத்துவதற்கு. ஆனால், அதை ரசாபாசமாக உபயோகிப்பதற்கு அல்ல. இந்தக் காதலின் அர்த்தம் தவறாகப் புரிந்து கொண்டிருப்பார்களோ என்ற ஐயம் மனதிலே உண்டாகிறது. இந்தப் புனிதக் காதல் பிறந்த கதையைப் பார்த்தால் ஓரளவு கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொள்ளமுடியும். மூன்றாம் நூற்றாண்டில் கிளாடியஸ் என்ற கொடுமை அரசன் தன் சேனையில் நிறைய பேர்கள் சேர ஒரு சட்டம் கொண்டு வந்தான் அதாவது கல்யாணம் ஆகாதவர்கள்தான் சேனையில் சேரமுடியும்.

அவரிடம் இருந்த Velaintine என்பவருக்கு இந்தச் சட்டம் பிடிக்கவில்லை. அவர் அரசனுக்குத் தெரியாமல் பல காதலர்களின் திருமணம் நடத்தித்தார். இது  அரசனுக்குத் தெரிந்து, பின் அந்த நல்லவர் பிடிப்பட்டு மரணதண்டனையும் பெற்றார். எல்லோரும் கருணையுடனும் பாசத்துடனும் அவரை வந்து பார்த்தார்கள் ஜெயிலின் அதிகாரியின் சிறு மகள் அவர் மேல் மிகவும் அன்பு  காட்டினாள், பெப்ரவரி 14ஆம் திகதி அவருடைய கடைசி நாள் அன்று அந்தச் சிறு பெண்னிற்கு ஒரு சின்னக் குறிப்பு எழுதிவைத்துவிட்டு மரணமடைந்தார்.

அந்த நாளிலிருந்து இந்தக் காதல் பறிமாற்றம். அவர் ஞாபகமாக நடக்கிறது. ஒரு பூக்களின் மூலமாகவோ, பொருட்களின் மூலமாகவோ இதை வெளிப்படுத்துகின்றனர். உண்மைக் காதலுக்கு நாமும் பச்சைக் கொடி காட்டுவோம். எதிர்ப்பார்ப்பு இல்லாத அன்பை வாரி வழங்குவோம். எல்லாக் காதலர்களுக்கும் என் வாழ்த்துகள். 

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452