Published On: Tuesday, February 14, 2012
வேகவைத்த பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படும்

(முஹம்மட் பிறவ்ஸ்)
இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அதிகரித்த எரிபொருள் விலைக்கேற்ப வேகவைத்த பேக்கரி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அனைத்து சிலோன் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இவ்விலை அதிகரிப்பை தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
டீசல் விலை அதிகரிப்பு காரணமாகவே பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக என்.கே.ஜெயவர்தன மேலும் தெரிவித்தார்.