Published On: Wednesday, February 15, 2012
இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறும்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதும் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமடையும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோ சனையை அரசாங்கம் கோரியுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெற்றதும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டதாகவும், ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் துணைச் செயலாளர் மரியா ஒட்டேரே நேற்று முன்தினம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியிருந்தார். இது தொடர்பில் கருத்துக் கேட்டபோதே வெளிவிவகா பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.