Published On: Wednesday, February 15, 2012
குடிகார கணவனை கட்டி கிணற்றில் போட்ட மனைவி

தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்த கணவனின் கை, கால்களை கட்டி கிணற்றில் தள்ளிவி்ட்டு கொலை செய்த மனைவி போலீசில் சரணடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 42). இவர் அதே பகுதியில் டி.என்.பி.எஸ்.சி.யில் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு தமிழரசி (வயது 40) என்ற மனைவியும், மணிமொழி (வயது 16) என்ற மகளும் உள்ளனர்.
குடிப்பழக்கம் கொண்ட கிருஷ்ணன் தினமும் வீட்டிற்கு குடித்து வந்து மனைவி, மகளிடம் ரகளையில் ஈடுபடுவது வழக்கம். சம்பவத்தன்று வழக்கம் போல குடித்துவி்ட்டு வந்து மனைவி மற்றும் மகளை அடித்து உதைத்துள்ளார். இதில் பொறுமை இழந்த தமிழரசி ராமகிருஷ்ணனின் தலை, கை, கால்களை கயிற்றால் கட்டினார். பிறகு வீ்ட்டின் பின்புறம் இருந்த கிணற்றில் தள்ளிவிட்டார். கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த ராமகிருஷ்ணன் நீரில் மூழ்கி, மூச்சு திணறி பலியானார்.
கணவனை கொலை செய்த தமிழரசி குற்ற உணர்வு காரணமாக பேராவூரணி போலீசாரிடம் அடுத்த நாள் காலையில் சரணடைந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தமிழரசியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.