Published On: Tuesday, February 14, 2012
மீன்பிடி படகுகளுக்கான எரிபொருள் நிவாரணத் தொகை அதிகரிப்பு

மீன்பிடி படகுகளுக்கென ஒரு நாளைக்கு ஒரு லீற்றர் டீசலுக்கு தலா 12 ரூபாவும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 25 ரூபாவும் நிவாரணமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மீனவர் சங்கங்களுக்கும் மீன்பிடித்துறை அமைச்சுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் இறுதியில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.