Published On: Saturday, February 18, 2012
அரசாங்க வைத்தியர்கள் வருடாந்த இடமாற்றங்களை நிராகரிக்க முடிவு

(முஹம்மட் பிறவ்ஸ்)
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற வருடாந்த இடமாற்றங்களை நிராகரிக்க முடிவு செய்துள்ளனர். அரசாங்க வைத்தியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை மாற்றிடம் வழங்கப்படுவதுண்டு. இதனால் மருத்துவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடந்த கலந்துரையாடலில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு இப்பிரச்சினையைக் கொண்டு சென்று இதற்கான தீர்வு காணவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். எனினும், இப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும், தொழிற்சங்க பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தக்கோரி மீண்டும் ஜனாதிபதி கடிதம் அனுப்பவுள்ளதாகவும் மேற்படி சங்கம் தெரிவிக்கிறது.
ஆக மொத்தத்தில், இந்த மாதம் ஒரு ஆர்ப்பாட்டமான மாதமாகத்தான் முடியும் போலிருக்கிறது.