Published On: Sunday, November 20, 2011
கல்முனையில் வீதி விபத்து ; ஒருவர் பலி
கல்முனை–அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அண்மையில் இன்று காலை செங்கல் ஏற்றிவந்த டிப்பர் வாகனமொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்மாந்துறையிலிருந்து கல்முனை நோக்கி செங்கல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனத்தின் அடிச்சட்டக டயர் ரொட் உடைந்ததன் காரணமாக வழுக்கிச் சென்ற வாகனம் எதிரே வந்த லொறியுடன் மோதுண்டதால் சம்மாந்துறையைச் சேர்ந்த அலியார் அர்ஸாத் (23) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
இதே விபத்தில் டிப்பர் வாகனத்தில் பயணித்த என்.ஜனூஸ் (17) என்பவரின் கால் பாகம் உடைந்துள்ளதுடன் முஹம்மது இஸ்மாயில் நபீர் (38) மற்றும் செங்லடி மல்லியபுரத்தைச் சேர்ந்த தேவராஜா (44) ஆகியோர் பலத்த காயங்களுடனும் யோகநாதன் (51) சிறு காயத்துடனும் கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய வீதிப்போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.