Published On: Tuesday, December 27, 2011
உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றோர்

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் கலைப் பிரிவுகளில் முதலிடம் பெற்றோர் விபரங்கள்.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கணித பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலை மாணவரான கமலக் கண்ணன் கமலவாசன் தேசிய ரீதியாக முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
வர்த்தகப் பிரிவில் தெபருவௌ தேசிய பாடசாலையின் இசாரா தில்ஹானி கமகே என்ற மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
விஞ்ஞானப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரியின் ருவன் பத்திரன என்ற மாணவர் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
கலைப் பிரிவில் கேகாலை சென் ஜோன்ஸ் மகளிர் வித்தியாலய மாணவி சஜின்தனி சௌசல்யா சேனாநாயக்க முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.