எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, January 08, 2012

நக்கீரன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

Print Friendly and PDF

ஜெயலலிதா குறித்த கட்டுரையுடன் வெளியான நக்கீரன் இதழைக் கொளுத்திய அ.தி.மு.க.வினர், சென்னையில்     உள்ள  அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும் தாக்குதல் நடத்தினர். 'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' என்ற தலைப்புடன் ஜெயலலிதா அட்டைப்படம் தாங்கி வெளியாகியுள்ள இந்தவார நக்கீரன் இதழை தமிழகம் முழுக்க அ.தி.மு.க.வினர் கொளுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவைப் பற்றி மிகக் கேவலமாக எழுதியுள்ள நக்கீரன் இதழை இனி விற்கக் கூடாது என பல கடைகளையும் அதிமுகவினர் நேரடியாக மிரட்டியுள்ளதாக புகார் கூறப்பட்டது.

சிதம்பரத்தில் அ.தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலர் வி.கே. மாரிமுத்து தலைமையில் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர். சாத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.பி. உதயகுமார் தலைமையில் பஸ்நிலையம் அருகே வாரப் பத்திரிகையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி எம்.எல்.ஏ. பரஞ்ஜோதி தலைமையிலும், வேலூரில் அமைச்சர் விஜய் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியாத்தம் டவுன், அரூர் மற்றும் பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களிலும் அ.தி.மு.க.வினர் அந்த பத்திரிகையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். குன்னூரில் நகராட்சி சேர்மன் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது அ.தி.மு.க.வினர் கடும் தாக்குதல் நடத்தினர். சோடா பாட்டில், பெரிய பெரிய கற்கள் மற்றும் உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் நக்கீரன் அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கு நின்ற கார்கள், டுவீலர்கள் ஆகியவற்றையும் அடித்து உடைத்தனர்.

100க்கும் அதிகமான அ.தி.மு.க.வினர் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தினர். பாதுகாப்புக்காக வந்த போலீசார் எதையும் தடுக்க முயற்சிக்காமல் அமைதியாக நின்றதாக நக்கீரன் தரப்பு புகார் கூறியுள்ளது. மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைராஜன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் போய் அமர்ந்துகொண்டு, நக்கீரன் அலுவலகத்துக்கு எந்த பாதுகாப்பும் தரவேண்டாம் என வற்புறுத்தியதாகவும் பத்திரிகை அலுவலகம் புகார் தெரிவித்துள்ளது.


அ.தி.மு.க.வினரின் தாக்குதலைக் கண்டு பயந்து ஜானிஜான்கான் சாலையில் உள்ள கடைக்காரர்களும் பொதுமக்களும் கதவுகளை முடிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தாக்குதல் நடந்தபோது நக்கீரன் ஆசிரியர் கோபால், இணையாசிரியர் காமராஜ், செய்தியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பத்திரிகை அலுவலகத்துக்குள் இருந்தனர். நக்கீரன் அலுவலகத்துக்குள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்களும் தாக்குதலை நேரடியாக எதிர்கொண்டனர். பிற்பகலுக்குப் பிறகும் தாக்குதல் தொடர்ந்ததாக நிருபர்கள் தெரிவித்தனர்.

வேளச்சேரி எம்.எல்.ஏ. அசோக் நக்கீரன் அலுவலக வாசலில் உள்ள கதவுக்கு வெளிபக்கமாக பூட்டு போட்டு, கதவின் மேல் தாக்குதல் நடத்தினார்.  அண்ணாசாலை அருகே அ.தி.மு.க.வினர் சுமார் 50 பேர் நக்கீரன் ஆசிரியர் கோபாலின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நக்கீரன் பத்திரிகை எரிப்பு மற்றும் அலுவலகம் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா இதுகுறித்து எதுவும் வெளிப்படையாக கருத்து கூறவில்லை. அ.தி.மு.க.வினரின் இந்த செயலுக்கு திமுக தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"ஜனநாயக நாட்டில் இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. கண்டிக்கத்தக்கது. எதிர்ப்பை சட்டப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அரசு இதுபோன்ற செயல்களை வேடிக்கைப் பார்க்கக் கூடாது" என அவர் கூறியுள்ளார்.
 

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452