Published On: Tuesday, January 31, 2012
தனுஷுக்கு பாலிவுட் ஹீரோயின்- ஆனந்த் ராய்

இந்தி படத்தில் நடிக்கும் தனுஷுக்கு பாலிவுட் ஹீரோயின் தேடுகிறார் இயக்குனர். ஐஸ்வர்யா இயக்கும் ‘3’ படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதில் அவர் பாடிய ‘ஒய் திஸ் கொலைவெறிடி’ பாடல் சர்வதேச அளவில் வரவேற்பு பெற்றது.
பாலிவுட் ஸ்டார் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் தனுஷுக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், இந்தி படமொன்றை தனுஷ் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. தனுஷும் அதற்கான ஸ்கிரிப்ட் தயாரித்து வருவதாக கூறினார்.
இதற்கிடையில் இந்தியில் தனுஷை ஹீரோவாக அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளார் பாலிவுட் இயக்குனர் ஆனந்த் ராய். ஏற்கனவே இவர் மாதவன், கங்கனா நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ என்ற இந்தி படத்தை இயக்கியவர். கோலிவுட் ஹீரோ தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானாலும் அவருக்கு தென்னிந்திய நடிகைகள் யாரையும் ஜோடி சேர்க்க இயக்குனர் விரும்பவில்லை.
பாலிவுட்டில் பிரபல நடிகை ஒருவரையே அவருக்கு ஜோடியாக்க முடிவு செய்துள்ளார். அவரை தேர்வு செய்யும் வேலையில் மும்முரமாக இருக்கிறார் இயக்குனர் ஆனந்த். ஏற்கனவே இப்படத்திற்கான போட்டோ ஷூட் காசியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.