Published On: Saturday, January 14, 2012
முதல் இடத்தை பிடிக்க கடவுளிடம் வேண்டினேனா?- காஜல் அகர்வால்

மாற்றான் படத்தில் பிசியாக இருக்கும் காஜல் அகர்வால் விஜய்யின் துப்பாக்கி படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். காஜல்அகர்வாலும் அவரது தங்கை நிஷா அகர்வாலும் குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு வந்தனர். அங்கு சாமி தரிசனம் செய்தனர் அப்போது ரசிகர்களிடம் இருந்து போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பினர். அப்போது காஜல் அகர்வால் நிருபர்களுக்கு அளித்த போட்டியில்,
எனக்கு பிடித்த கடவுள் திருப்பதி வெங்கடாஜலபதி. குடும்பத்தினருடன் இன்று தரிசனம் செய்தேன். சாமியிடம் என்ன வேண்டினேன் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. திருப்பதிக்கு வர ரொம்ப நாட்களாக முயற்சி செய்தேன். இப்போது தான் வர முடிந்தது. சினிமாவில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு நடிகையும் ஆசைப்படுகின்றனர். எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. முதல் இடத்தை பிடிக்க கடவுளிடம் வேண்டினேனா என்று சொல்ல முடியாது. கடவுளிடம் கேட்டதை வெளியே சொன்னால் பலிக்காது என்றார்.