Published On: Tuesday, January 31, 2012
மார்ச் 11ம் திகதி ரீமா சென் -ஷிவ் கரண் சிங் திருமணம்

'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் நாயகியாக நடிக்கவில்லை ரீமாசென். 'ராஜபாட்டை' படத்தில் விக்ரம், ஸ்ரேயாவுடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார்.
ரீமாவும், ஷிவ் கரண் சிங் என்ற தொழிலபதிரும் காதலித்து வந்தார்கள். ரீமா எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்ததால் இருவரும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் ரீமா சென் "இப்போதைக்கு திருமணம் இல்லை தேதி முடிவானவுடன் அறிவிப்பேன் " என்று கூறினார்.
இந்நிலையில் மார்ச் 11ம் தேதி இருவருக்கும் திருமண நடைபெற இருப்பது இப்போது உறுதியாகியுள்ளது. நிச்சயதார்த்தம், மெஹந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஷவ் கரண் சிங்கின் பண்ணை வீட்டில் நடைபெற இருக்கிறது.
ரீமா சென் -ஷிவ் கரண் சிங் திருமணம் தலைநகர் டெல்லி அருகே உள்ள மணமகனின் பண்ணை வீட்டில் விமர்சையாக நடக்கிறது. அரசியல் பிரபலங்கள், சினிமா புள்ளிகள் என திரளானோர் இதில் பங்கேற்க உள்ளனர்.
மணமகன் கரண் சிங், மோகா, ஷ்ரூம், ஸ்மோக் ஹவுஸ் கிரில் ஆகிய ஓட்டல்களுக்கு சொந்தக்காரர்.
தொழிலதிபரை மணக்கும் நடிகைகள் பட்டியலில் இப்போது ரீமாவும் சேர்கிறார்.