எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, February 07, 2012

நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றி; சிம்பாப்வே பரிதாபம்

Print Friendly and PDF


ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சென்றுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரண்டாவது போட்டி வாங்கெரையில் நடந்தது. "டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் பிரண்டன் டெய்லர், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

நிகோல் சதம்:
நியூசிலாந்து அணிக்கு நிக்கோல், கப்டில் இணைந்து சூப்பர் துவக்கம் தந்தனர். கப்டில் 77 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஜேக்கப் ஓரம் அரைசதம் (59) அடித்து அவுட்டானார். டாம் லதாம் அதிரடியாக 48 ரன்கள் சேர்த்தார். பிரண்டன் மெக்கலம் (20) நிலைக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோல் ஒருநாள் அரங்கில் இரண்டாவது சதம் (146) அடித்து திரும்பினார். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 372 ரன்கள் குவித்தது. 

சிகும்புரா ஆறுதல்:
எட்ட முடியாத இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணியை மசகட்சா (5), மட்சிகென்யரி (3) துவக்கத்திலேயே கைவிட்டனர். சகபவா (11), டெய்லரும் (4) நீடிக்கவில்லை. தைபு அரைசதம் அடித்து (50) வெளியேறினார். வாலர் 18, மசகட்சா 38 ரன்கள் எடுத்தனர். சிகும்புரா மட்டும் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 231 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் ஓரம் 3 விக்கெட் கைப்பற்றினார். 

இதையடுத்து நியூசிலாந்து அணி 2-0 என்ற முன்னிலையுடன், தொடரை கைப்பற்றியுள்ளது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452