Published On: Tuesday, February 28, 2012
இலங்கை அரசுக்கு ஆதரவாக இன்றும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்

(சர்ஜுன்)ஐ.நாவின் மணித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்பிக்கப்படும் குற்றச்சாட்டை கண்டித்து இன்று ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.அட்டாளைச்சேணை அக்கரைபற்று பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளுக்கு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைசரும் தேசிய காங்ரசின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமை வகித்தார்.பிரதேச மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அமைசர் உரை நிகழ்த்துகையில் மூவின மக்களும் தேசிய ஒருமைப்பாட்டோடு வாழ்ந்து வந்த நம் நாடடினுல் காத்திரபிரகாரமாக நம் நாட்டிகுள் புகுந்த பயங்கரவாதம் சொந்த நாட்டிற்குள்ளேயே சுதந்திரமாக உலா வர முடியாத ஒரு நிலை நமக்கேற்பட்டது.சமயத்தலங்களில்லேயே மனிதர்கள் வேட்டையாடப்பட்டு இரத்த ஆறு ஓடியது. நமது நாட்டில் பயங்கரவாதம் தலைவிருத்தாடி நாடு அல்லோலகல்லோலபட்ட சந்தர்பத்தில்தான் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் புத்திசாதுாரியத்தினாலும் விடா முயற்சியினாலும் வீர உணர்வுகளினாலும் நம் தாய் நாட்டில பயங்கரவாதம் வேறோடு பிடுங்கி வீசப்பட்டது.
இலங்கை மக்களது சுதந்திர வாழ்வையும் சௌபாக்கியத்தையும் இன மொழி ஒற்றுமையையும் இல்லாமற் செய்ய முனைப்புக் கொள்ளும் சதிகாரர்களின் வலைப்பின்னல்களை களைத்தெறிவோம் என்றார்.
நிகழ்வில் கிழக்கு மாகாண அமைசரும் தேசிய காங்ரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான துர்கர்நயிம் ஏ.அமீர் மற்றும் அக்ரைபற்று மாநகர மேயர் அக்ரைபற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் திணைகள தலைவர்களும் கலந்து கொன்டனர்.





(தென்கிழக்கு துருவம் செய்தியாளர் எஸ். எல். மன்சூர்)
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையிலிருந்து...


