Published On: Friday, February 10, 2012
‘தானே’க்கு நயன்தாரா 5 இலட்சம் நிதியுதவி

தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை நாசமாக்கிய தானே புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதிக்கு நடிகை நயன் தாரா ரூ5 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.
தொழிலதிபர்கள், திரை உலக நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் முதல்வர் ஜெயலலிதாவிடம் தானே புயல் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவகுமார் உள்ளிட்டோரும் தானே புயல் நிவாரண நிதி வழங்கியிருந்தனர். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நடிகை நயன் தாரா இன்று சந்தித்தார்.
தானே புயல் நிவாரண நிதியாக ரூ5 லட்சத்துக்கான காசோலையை அவர் முதல்வரிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயன், அனைவரும் தானே புயல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

