Published On: Sunday, February 12, 2012
நள்ளிரவு முதல் தனியார் பேரூந்துகள் வேலை நிறுத்தம்?

தனியார் பேரூந்துகள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்து தமது சங்கம் இந்த தீர்மானத்திற்கு வந்ததாகவும், இது குறித்து நாளை திங்கட்கிழமை உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், குறித்த போராட்டத்தில் தமது தரப்பினர் இணைந்து கொள்ளவில்லை என்று தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.