Published On: Tuesday, February 14, 2012
சோனியா அகர்வாலோடு சில நிமிடங்கள்

"மூணு வருஷம் நடிப்பு, சினிமானு நிறைய மிஸ் பண்ணிட்டேன். அதுல எனக்கு அதிகமான வருத்தங்கள் இருக்கு. இப்போ மறுபடியும் ரீஎன்ட்ரி ஆனதில் ரொம்ப சந்தோஷம் " மழை விட்ட பிறகு தூவானத்தை ரசிப்பதைப் போல் ரசனையோடு பேசுகிறார்.
''எடுத்த எடுப்பிலேயே கேட்டுடறோம். எப்போ கல்யாணம்?''
''இப்போதைக்கு இல்ல. இன்னும் அஞ்சு அல்லது ஆறு வருஷத்துக்குப் பிறகுதான் யோசிக்கலாம்னு இருக்கேன். அப்போதான் முடிவெடுக்க சரியா இருக்கும்னு தோணுது.''
''இனிமே ஹீரோயினாதான் நடிப்பேன்னு அடம் புடிக்கிறீங்களாமே?''
''எனக்கு நாற்பது வயசாகிடலையே. 28 முடிஞ்சு 29தான் தொட்டிருக்கேன். ஹீரோயினா மட்டும் நடிப்பேன்னு சொல்லல. 'வானம்' படத்துல வந்த மாதிரி நல்ல ஃபீல் உள்ள கேரக்டர்னா நடிப்பேன். லாஜிக் இல்லாத துண்டு துக்கடா கமர்ஷியல் படங்கள்ல நடிக்க மாட்டேன். 'திருட்டுப்பயலே' மாதிரி கமர்ஷியல்லயும் ஒரு லாஜிக் இருந்தா கண்டிப்பா நடிப்பேன்.''
''இன்னுமா தமிழ் கத்த்துக்கல?''
''நான் தமிழ் கத்துக்க எந்த டியூஷனும் போகல.ஆனா நீங்க தமிழ்ல என்ன பேசினாலும் நான் புரிஞ்சுக்கிட்டு ஆங்கிலத்துல பதில் சொல்வேன். ஸ்லாங் கொஞ்சம் கொஞ்சமா கத்துட்டு வர்றேன். சீக்கிரம் நான் தமிழ்ல பேசுறதை நீங்க கேட்கலாம்.''
''தமிழ்சினிமாவில் புதுசு புதுசா ஹீரோயின்கள் வந்துக்கிட்டே இருக்காங்க? எப்படி சமாளிக்கப் போறீங்க?''
''எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் நடிச்ச படங்கள்ல என்ன நான் நிரூபிச்சிருக்கேன். எத்தனை பேர் வந்தாலும் நான் ஃபீல்டுல நிப்பேன். ஜெயிப்பேன். இன்னும் சொல்லப்போனா முன்னைவிட இப்போ என் தன்னம்பிக்கை அதிகமாயிருக்கு.''
''டர்ட்டி பிக்சர் தமிழ்ல எடுத்தா நடிப்பீங்களா?''
''ஏன் நடிக்கக்கூடாதா? என்னைப் பொறுத்தவரை சில்க் கேரக்டர்ல நடிக்க நான் ரொம்ப பொருத்தமா இருப்பேன். நடிக்க நான் ரெடி.''
''அடுத்த திட்டம் என்ன?''
''என் தம்பி சாரப் அகர்வால் ட்ரினிட்டி ஸ்கூல் ஆஃப் லண்டன்ல அஞ்சு வருஷம் மியூசிக் படிச்சான். அவனை வெச்சு மந்தவெளியில மியூசிக் ஸ்கூல் ஆரம்பிக்கப்போறேன். வெஸ்டர்ன், பியானோ, கிடார், டிரம்ஸ்னு சகலமும் கத்துத் தர்றதுதன் திட்டம். 'சவுண்ட் கெராஜ்’னு இசைப் பிரியர்களுக்கான இடமா ஸ்கூல் இருக்கும். அப்புறம் ஹைதராபாத், பெங்களூர்ல ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.''
''தனுஷின் 'கொலவெறி’ ஹிட்டாகி இருக்குதைப் பற்றி என்ன நினைக்குறீங்க?''
''எதுவுமே சிம்பிளா சொன்னா ரீச் ஆகிடும். கொலவெறி பாட்டு காம்ப்ளிகேட்டா, டூ மச்சா இல்ல. அதான் வெற்றிக்குக் காரணம். எதிர்பார்க்காதவிதமா நான் தனுஷ§க்கு வாழ்த்து சொல்ல முடியல. ஆனா என் வாழ்த்துகள் எப்பவும் தனுஷுக்கு இருக்கு. ''
''உங்க நட்பு வட்டம் பெருசுன்னு சொல்றாங்களே?''
''ஆமாம். ரீமாசென், த்ரிஷா, ரம்யாகிருஷ்ணன், வரலட்சுமி என்னோட க்ளோஸ் ஃபிரண்ட்ஸ். இவங்க கூட இருக்கும்போது நேரம் போறதே தெரியாம பேசிட்டு இருப்பேன். எப்போ ஃப்ரீயா இருந்தாலும் உடனே மீட் பண்ணிடுவோம்.''
''ஸ்லிம் ரகசியம்?''
''ஃபிட்னெஸ் ட்ரெய்னர் சங்கீதா என் ஃபிரண்ட். ரைஸ், சிக்கன், எண்ணெய்ப் பொருட்கள்னு எல்லாத்துக்கும் ஸ்ட்ரிக்ட்டா தடை போடச் சொல்லிட்டா. அவ சொன்ன டயட்டை ஃபாலோ பண்ணேன். இப்போ எடை குறைஞ்சு கன்னம், முகம்லாம் எனக்கே எனக்குப் பிடிச்ச மாதிரி ஸ்லிம் ஆகிட்டேன்.''
''தனிமையில் இருக்குற மாதிரி ஃபீல் பண்றீங்களா?''
''நிச்சயமா இல்ல. மூணு வருஷம் கொஞ்சம் வருத்தம் நிறைய சந்தோஷம்னு நல்லா வாழ்ந்துட்டேன். இப்போ என் தம்பி, அப்பா, அம்மான்னு குடும்பத்துக்காக நேரம் செலவழிக்குறது, ஷூட்டிங் போறதுன்னு சந்தோஷத்துக்கு பஞ்சமில்லாம இருக்கேன். எந்த குறையும் இல்லை.''
''செல்வராகவன் படங்கள்ல நடிக்கலைன்னு வருத்தம் இருக்கா?''
''மூணு படங்கள்ல நடிச்சது ரொம்ப திருப்தியா இருக்கு . கஜோல் 'குப்த்’ படத்துல நடிச்ச மாதிரி நெகடிவ் ரோல்ல நடிக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன். இன்னும் வித்தியாசமான ரோல்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன்.''