எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Sunday, February 26, 2012

நாளை வடக்கில் மாபெரும் மக்கள் பேரணி

Print Friendly and PDF

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறை வேற்றப்படுவதைக் கண்டித்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதி மக்கள் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றினை நடத்தவுள்ளன.

நாளை (திங்கட்கிழமை) 10 மணிக்கு இந்த மாபெரும் கண்டனப் பேரணி நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் மற்றும் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இதற்கமைய இந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கான ஒழுங்குகளை அந்தந்தப் பிரதேச மக்கள் ஏற்பாடு செய்து வருகின் றனர். ஜெனீவாவில் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் ஒரு இறைமையுள்ள நாட்டுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரும் அதிகாரம் எந்த ஒரு ஐ.நாவின் அமைப்புக்கும் கிடையாது என்பதை வலியுறுத்தியும், இலங்கையில் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தாம் முன்பு பட்ட கஸ்ட துன்பங்களை மறந்து சந்தோஷமாக வாழ்வதையும் சுட்டிக்காட்டியே தாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வுள்ளதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த கால போரினால் முழுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட கிளிநொச்சிப் பகுதி மக்கள் தற்பொழுது பல்வேறு அரச அபிவிருத்திகளைப் பெற்று மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகச் செயற்படுவோரைக் கண்டித்து இப்பிரதேச மக்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியினை ஒழுங்கு செய்து நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்றார்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452