Published On: Saturday, March 10, 2012
ஆபாசப்படங்களை காட்டி மாணவர்கள் மீது பாடசாலை அதிபர் வல்லுறவு

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச படங்களை காண்பித்து பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தி வந்த உடதும்பர பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரை உடதும்பரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இவ்வாறு இரு மாணவர்களை பாலியல் குற்றச் செயலில் ஈடுபடுத்தியதாக பிரதி அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பாடசாலை விட்ட பின்னர் பிரதி அதிபரின் தனியான அறை ஒன்றில் கணனிமூலம் ஆபாச படங்களை மாணவர்களுக்கு காண்பித்து பாலியல் குற்றம் புரிந்து வருவதாக பெற்றோர்கள் சிலர் உடதும்பரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தனையடுத்து பொலிஸார் குறிப்பிட்ட பிரதி அதிபரை கைது செய்துள்ளதுடன் அவரது அறையிலிருந்த கணனி கருவி மற்றும் சில இருவட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபரான பிரதி அதிபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.