எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Monday, June 09, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, March 07, 2012

தெலுங்கில் கவர்ச்சியாய் நடிக்கவில்லை - த்ரிஷா

Print Friendly and PDF


தெலுங்கு படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடிப்பதாக கூறப்படுவது பற்றி த்ரிஷா பதில் அளித்தார். அவர் கூறியது: தமிழில் கடைசியாக மன்மதன் அம்பு படத்தில் நடித்தேன். 

கடந்த 7 மாதமாக தமிழில் நடிக்காமல் இருந்தேன். எனது படங்களும் தமிழில் வெளியாகவில்லை. இதற்கு என்ன காரணம் என கேட்கிறார்கள். நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். 

அதைத் தவிர வேறு காரணம் இல்லை. காத்திருந்ததற்கு பலனாக விஷாலுடன் சமரன், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களில் நடிக்கிறேன். சமரன், த்ரில்லர் படம். அதில் ரொமான்டிக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. என்றென்றும் புன்னகை  படம், காதல் கதையை கொண்டது. படம் முழுக்கவே காதல் காட்சிகள் இருக்கும். அதனால் எனக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 

நான் ரொமான்டிக்கான பெண்ணா என சிலர் கேட்கிறார்கள். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடித்ததில் இருந்து இப்படி கேட்கிறார்கள். அந்த படம் எனக்கு தந்த பெயரை மறக்க முடியாது. அதே நேரம், நான் ரொமான்டிக்கானவள் கிடையாது. தெலுங்கு படத்தில் இளமையாக தெரிய வேண்டும் என்பதற்காக படு கவர்ச்சியாக நடிப்பதாக புரளி கிளப்புகிறார்கள். அதற்கெல்லாம் எனக்கு அவசியமே கிடையாது. 'தம்மு' தெலுங்கு படத்தில் இரண்டு விதமான கெட்டப்பில் நடிக்கிறேன். அது கதைக்கு தேவைப்படுகிறது. மற்றபடி எல்லை மீறி கவர்ச்சியாக நடித்ததில்லை. நடிக்கவும் மாட்டேன். 

என்னுடன் நடித்த ஹீரோக்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் கமல்ஹாசன்தான். ஷூட்டிங்கில் அனைவரையுமே கவனிப்பார். சிறு தவறு செய்தாலும் கண்டுபிடித்து திருத்துவார். நான் ஏற்க விரும்பும் கேரக்டர்களில் 'அருந்ததி' போன்ற பட கேரக்டருக்கு முக்கியத்துவம் தருகிறேன். இவ்வாறு த்ரிஷா கூறினார்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452