எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, March 08, 2012

இறுதிச் சமரில் அவுஸ்திரேலியா - இலங்கை மோதல்; வெற்றி யாருக்கு

Print Friendly and PDF


முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் மூன்றாவது பைனலில் இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி கோப்பையை தட்டிச் செல்லும் என்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். 

இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் அவுஸ்திரேலியாவில் நடக்கிறது. லீக் போட்டிகளின் முடிவில் இந்திய அணி வெளியேற, அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட பைனல் நடந்து வருகிறது. முதல் இரு பைனல்கள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று, 1-1 என சம நிலையில் உள்ளது. கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்ய, இரு அணிகளும் இன்று மூன்றாவது மற்றும் கடைசி பைனலில் மோதுகின்றன.

வார்னர் உறுதி:
ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மைக்கேல் கிளார்க் காயமடைந்து இருப்பது பெரும் பின்னடைவாக உள்ளது. இதனால் வாட்சன் மீதான சுமை அதிகரித்துள்ளது. முத்தரப்பு தொடர் பைனல்களில் அடுத்தடுத்து சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்ற வார்னர் காயம் அடைந்திருந்தாலும், இன்று அணிக்காக களமிறங்குகிறார். மாத்யூ வேட், விக்கெட் கீப்பிங் பணியில் இரு பைனலிலும் சொதப்பினார். இருப்பினும், பேட்டிங்கில் ஆறுதல் தருகிறார். கிளார்க் இல்லாததால், பீட்டர் பாரஸ்ட் இடம் பெறலாம். வழக்கம் போல மைக்கேல் , டேவிட் ஹசி சகோதரர்கள் தூள் கிளப்ப காத்திருக்கின்றனர். பின் வரிசையில் கிறிஸ்டியனும் உள்ளது பலம் தான்.

காயமடைந்த பவுலிங்:
"நம்பர்-1' அணியான ஆஸ்திரேலியாவின் பவுலிங், இத்தொடரில் பெரும் ஏமாற்றமாக உள்ளது. 270க்கு மேற்பட்ட ரன்களை துரத்திய இந்தியா (ஒரு முறை), இலங்கை (2) அணிகள் மூன்று முறை வென்றன. முதல் பைனலில் 321 ரன்கள் எடுத்தும் இலங்கை கிட்டத்தட்ட நெருங்கி வந்தது. கடந்த முறை முதல் 16 ஓவரில் இலங்கை 100 ரன்களை கடந்து விட்டது. 

பிரட் லீ காயத்துடன் விளையாடுகிறார். பட்டின்சனும் காயத்தினால் அணியில் இருந்து விலகி விட்டார். ஹில்பெனாஸ் ஏற்கனவே சொதப்பி வரும் நிலையில், வேறு வழியின்றி உள்ளூர் போட்டிகளில் அசத்திய நாதன் லியான் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தவிர, மெக்கே, தோகர்டி, டேவிட் ஹசி போன்றவர்களும் உதவ வேண்டும். 

துணிச்சல் வெற்றி:
முதல் பைனலில் போராடி தோற்ற இலங்கை அணி, இரண்டம் பைனலில் எழுச்சி பெற்று, ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதற்கு கேப்டன் ஜெயவர்தனா, தில்ஷன் ஜோடி கொடுத்த மின்னல் வேக துவக்கம் தான் காரணம். இன்றும் இது தொடரும் பட்சத்தில், இலங்கை அணி சாதிக்கலாம். இதற்கு "மிடில் ஆர்டர்' வீரர்கள் சங்ககரா, சண்டிமால், திரிமான்னே கைகொடுக்க தயாராக உள்ளனர்.

"ஆல்-ரவுண்டர்' மாத்யூஸ், 100 சதவீத உடற்தகுதி இருந்தால் மட்டுமே வருவார். இல்லையெனில், கபுகேதரா தொடர்வார். தவிர, குலசேகரா, தரங்காவும் ஆறுதல் தரலாம்.

மலிங்கா உறுதி:
இலங்கை அணியின் பவுலிங்கை பொறுத்தவரை மலிங்கா, மீண்டும் பார்மிற்கு திரும்பியது வரவேற்கத்தக்கது. குலசேகரா, மகரூப்பும் ஆறுதல் தருகின்றனர். இவர்களது பெரிய பலமே தில்ஷன், ஹெராத்தின் "சுழல்' தான். ஆடுகளமும் மந்தமாக இருப்பதால் ஆஸ்திரேலிய அணியை குறைந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்தலாம்.

கோப்பை யாருக்கு:
இந்த சீசனில் "ரியோபி' கோப்பை தொடரில், அடிலெய்டில் நடந்த 5 போட்டிகளில், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 4ல் வென்றது. ஒரு போட்டி "டை' ஆனது. தவிர, இந்த ஆடுகளம் இலங்கை அணியின் "சுழலுக்கு' சாதகமாக இருப்பதும் பலம் தான். இதனால் கோப்பை வெல்ல ஆஸ்திரேலியா கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

மழை வருமா:
 போட்டி நடக்கும் அடிலெய்டில் வெப்பநிலை அதிகபட்சம் 28, குறைந்த பட்சம் 17 டிகிரி செல்சியசாக இருக்கும். இன்று வானம் தெளிவாக இருக்கும்.

தோல்வி அதிகம்:
அடிலெய்டில் இலங்கை அணி பங்கேற்ற 17 போட்டிகளில், 4ல் மட்டும் தான் வென்றுள்ளது. 
* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 போட்டிகளில், இலங்கை அணி 2 வெற்றி, 6 தோல்வி அடைந்துள்ளது.
* ஆஸ்திரேலிய அணி, இலங்கைக்கு எதிராக அதிகபட்சமாக 323/2 (1985) ரன்கள் எடுத்துள்ளது.
* இலங்கை அணி அதிகபட்சமாக 274/2 ரன்கள் (2012, எதிர்-ஆஸ்திரேலியா) எடுத்தது.

இது வரலாறு:
முத்தரப்பு தொடரில் கடந்த 1990க்குப் பின், எப்போதெல்லாம் மூன்றாவது பைனல் நடந்ததோ, அவை அனைத்திலும் ஆஸ்திரேலியா வென்றது. இதில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக இரண்டு (1993-94, 1997-98), இலங்கைக்கு எதிராக ஒரு முறை (2007-08) வென்றுள்ளது. இதனால் மீண்டும் ஆஸ்திரேலியா வெல்லும் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

"ஹெட்' கிளார்க் இல்லை:
 ஆஸ்திரேலிய அணிக்கு மிகப் பெரும் அதிர்ச்சி. கேப்டன் மைக்கேல் கிளார்க் (தொடையின் பின்பகுதியில் காயம்), வேகப்பந்து வீச்சாளர் பட்டின்சன் (இடுப்பு தசைப்பிடிப்பு) இருவரும் காயம் காரணமாக இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளார்க் இல்லாத நிலையில் தலைமை பொறுப்பை வாட்சன் ஏற்க உள்ளார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452