எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, March 07, 2012

இலங்கை அணித்தலைவர் ஜெயவர்த்தனவுக்கு அபராதம்

Print Friendly and PDF


முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரின் இறுதிச்சுற்றின் இரண்டாவது போட்டி அடிலெய்ட் நகரில் நேற்று  நடைபெற்றது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய  போட்டியின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டமைக்காக ஊதியத்தில் 10 சதவிகிதம் அபாராதமாக ஜெயவர்த்தனவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியின் போது பர்வீஸ் மஹரூவ் வீசிய பந்தொன்று துடுப்பாட்ட வீரரின் இடுப்புக்கு மேல் உயர்ந்ததால், நடுவர் புரூஸ் ஒக்ஸன்போர்ட் அப்பந்தை நோ பாலாக அறிவித்தார்.

இதனால் நடுவருடன் மஹேல ஜெயவர்த்தன வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் மஹேலவின் இந்த நடவடிக்கை ஒழுங்குவிதிகளின் 2.1.3 வது பிரிவை மீறுவதாகும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இலங்கை அணி 8 விக்கெட் வித்தயாசத்தில் வெற்றியீட்டிய இப்போட்டியின் பின்னர் ஐ.சி.சி. சிறப்பு மத்தியஸ்தர் குழாமைச் சேர்ந்த கிறிஸ் புரோட்டினால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மஹேல ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டதாகவும் அதனால் சம்பிரதாய விசாரணைகள் தேவைப்படவில்லை எனவும் ஊடக அறிக்கையொன்றில் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

எந்தவொரு சூழ்நிலையிலும் நடுவரின் தீர்ப்பை மதிப்பதுடன் ஏற்றுக்கொள்ளவும் வேண்டுமென ஐ.சி.சி. ஒழுங்குவிதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால் மஹேல ஜெயவர்த்தனவின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கிறிஸ்புரோட் தெரிவித்துள்ளார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452