துருவம் இணையத்தளம் டொப் குயின் நிறுவனத்துடன் இணைந்து நடாத்து மிகப்பிரமாண்டமான 2012 - இன்னிசை இரவு நிகழ்ச்சி கல்முனை தனியார் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள சந்தாங்கேணி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16.03.2012) நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிற்பகல் 5 மணிக்கு இந்தியாவிலிருந்து வருகைதரும் 'கஸால்' இசைக்குழுவின் இசைநிகழ்ச்சிகள் இடம்பெறும். பிற்பகல் 6.30 வரை நடைபெறும் இந்நிகழ்வு முற்றிலும் இலவசமாக நடாத்தப்படும். இசைத்துறையில் ஆர்வமுள்ள அனைத்து மாணவர்கள், இளைஞர், யுவதிகள், பெரியோர்கள் அனைவரும் இதனை நேரடியாகப் கண்டுகளிக்க முடியும். கல்முனை மாநகர முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெறும் இந்திய 'கஸால்' இசைநிகழ்ச்சிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதனையடுத்து, இரவு 8 மணிக்கு எம்.சிவக்குமாரின் அக்னியின் இசையில் பிரபல பாடகர்கள், பாடகிகள் கலந்துகொள்ளும் அட்டகாசமாக இசைநிகழ்ச்சிகள் இடம்பெறும். நீர்கொழும்பு SEA DANCERS இசைக்குழுவின் அசத்தல் நடன நிகழ்வுகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும். இந்நிகழ்ச்சிக்கு 100 கட்டணம் செலுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.
இந்நிகழ்வுகள் பிறை எப்.எம். வானொலியில் (102 MHz) நேரடியாக அஞ்சல் செய்யப்படும். இந்த இசை நிகழ்ச்சிக்கு 'தினக்குரல்' பத்திரிகை ஊடக அனுசரனை வழங்கிக்கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாடு : ஸ்கை எண்டர்டைமன்ட்