எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, March 07, 2012

நானுஓயா முதல் நுவரெலியா வரை விரைவில் ரயில் பாதை

Print Friendly and PDF


நானுஓயா முதல் நுவரெலியா வரையிலான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வாய்மூல பதிலுக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வரின் கேள்விக்கு பதில் அளித்துப் பேசும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

7 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த ரயில் சேவையை மீண்டும் ஆரமப்பிப்பது குறித்த நிலைப்பாடு என்னவென்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், அந்த சேவை நிறுத்தப்பட்டு நீண்ட காலம் ஆகின்றது. எனவே அதற்காக புதிய அகலமான ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். மேலும் ரயில் பாதை உள்ள பிரதேசங்களில் சிலர் சட்ட விரோதமாக குடியேறியுள்ளனர்.

அவர்களை அப்புறப்படுத்தி புதிய பாதை அமைக்கும் சாத்தியம் உண்டா அதற்கான முழுச் செலவினம் எவ்வளவு என்பவை தொடர்பில் முழு ஆய்வொன்று நடத்தப்பட வேண்டும். கூடிய விரைவில் அந்த ஆய்வை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452