எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Thursday, March 01, 2012

'டபுள் மீனிங்' படங்களுக்கு மலையாளத்தில் எதிர்ப்பு

Print Friendly and PDF


மலையாளத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட படங்களுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மலையாள படங்கள் என்றாலே கவர்ச்சி படங்கள் என்ற நிலை மாறி நல்ல கதை அம்சமுள்ள படங்கள் வரத் தொடங்கின. 

தற்போது அந்த நிலை மீண்டும் மாறிவருவதாக மலையாள படவுலகினர் கூறுகின்றனர். சமீபகாலமாக வரும் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இடம்பெறுகிறது. கணவனை ஏமாற்றும் பெண்கள், காதலனை ஏமாற்றும் கதைகள், பெண்களை கவர்ச்சியாக சித்தரிக்கும் படங்கள் அடுத்தடுத்து வருகிறது. 

இதுபோன்ற படங்களுக்கு புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் கைதட்டலும், வரவேற்பும் கிடைப்பதால் அந்த பாணியை தொடர்ந்து பயன்டுத்துகின்றனர். குடும்ப பாங்கான கதைகள் என்று கூறப்படும் படங்களில் கூட இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெறுகிறது. இந்தநிலை மாற வேண்டும். ஒரு சாரார் இதுபோன்ற படங்களை விரும்பினாலும் பெரும்பாலானவர்கள் இதை வரவேற்கவில்லை. எனவே நல்ல கதை அம்சமுள்ள படங்களில் டபுள் மீனிங் வசனங்கள், ஆபாசத்தை தூண்டும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452