Published On: Monday, March 05, 2012
நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஆர்வம் - பிபாஷா

முத்தக் காட்சிகளில் நடிப்பதைவிட நெருக்கமான காட்சிகளில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டுகிறாராம் பாலிவுட் 'கவர்ச்சிப் பிசாசு' பிபாஷா பாசு.
முத்தம் கொடுக்கப் பயமாக இருப்பதாக கூறும் அவர் அதற்கு அந்தரங்கமான, நெருக்கமான காட்சிகளில் நடித்து விட்டுப் போய் விடலாம் என்று காரணம் கூறுகிறார்.
பிபாஷாவும், இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமும் 9 ஆண்டுகளாக விழுந்து விழுந்து காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு உடைந்து பிரிந்து விட்டனர். பிரிவுக்குப் பின்னர் ஜான் குறித்து அவர் கூறுகையில், ஜானுக்கு வயதாகிறது அதனால் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளட்டும் என்று பிப்ஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரை வயதில் குறைவானவரை டேட் செய்கிறார் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்துக் கேட்டதற்கு, என்னை விட 7 வயது பெரியவரை பல ஆண்டுகளாக காதலித்தேன். அப்படி இருக்கையில் வயதில் சிறியவரைக் டேட் செய்யக் கூடாதா என்கிறார். ரொ்ம்ப லாஜிக்கான பேச்சுதான்.
இதற்கிடையே, பிபாஷாவுக்கு மாதவனின் கேரக்டர் ரொம்ப பிடித்துவிட்டது. அதனால் அவரைப் போன்ற குணாதிசயங்கள் உள்ள ஒருவரை தனக்கு பரிந்துரைக்கும்படி மாதவனிடமே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் என்று வந்து விட்டால் சிறிசாவது, பெரிசாவது