Published On: Friday, March 09, 2012
பஷில் ராஜபக்ஷவின் உதவியுடன் நீர்கொழும்பு அபிவிருத்தி செய்யப்படும்

(கலாநெஞ்சன்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் உதவியுடன் நீர்கொழும்பு நகரம் மேலும் அபிவிருத்தி செய்யப்படும். மாநகர சபையின் கீழ் செயற்படும் முன்பள்ளி பாடசாலைகள், தாய்-சேய் நலன் பிரிவு, கழிவகற்றல், மைதானங்கள், சந்தைகள் இவை யாவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
நீர்கொழும்பு மாநகர சபையின் புனரமைப்பு செய்யப்பட்ட நிதிப்பிரிவு அலுவலகத்தை நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே, மேல்மாகாண சபை வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாணம், மீன்பிடித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நிமல்லான்ஸா குறிப்பிட்டார். இந்நிகழ்வில் மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா தொடர்ந்து உரையாற்றுகையில், காமச்சோடை வாராந்த சந்தை 130 மில்லியன் ரூபா செலவிலும் நீர்கொழும்பு இரவுச்சந்தை 160 மில்லியன் ரூபா செலவிலும் புனரமைப்பு செய்யப்படும். அத்துடன் 800 மல்லியன் ரூபா செலவிடப்பட்டு மைதானங்கள் புனரமைப்பு செய்யப்படும். நீர்கொழும்பு ராஜபக்ஷ பூங்கா 1940 மில்லியன் ரூபா செலவில் நவீன மயப்படுத்தப்படவுள்ளது என்றார்.




