Published On: Sunday, March 04, 2012
அரவான் நாயகியும் - அங்காடி நடிகையும்

கடை வீதி நடிகை என்கிறார்கள் அஞ்சலியை. அங்காடித்தெரு படத்தில்நடித்ததால்தான் அப்படி யொரு பட்டப்பெயர். கடை திறப்பு விழாவிலேயே அதிக கவனம் செலுத்தி இன்கம்டாக்ஸ் கட்டுகிற அளவுக்கு திறப்பு விழா நாயகியாகிவிட்டார் அவர்.
அந்த வகையில் பார்த்தாலும் இவர் கடைவீதி நாயகிதான். ஆனால் இவருக்கோ, நமீதாவுக்கோ, சினேகாவுக்கோ இல்லாத பந்தா இவர்களை போலவே கடைதிறப்பு விழாக்களில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் தன்ஷிகாவிடம் காண முடிகிறது.
நாள் நட்சத்திரமெல்லாம் பேசி அட்வான்சை வாங்கிய பின்பு, எத்தனை சைஸ்ல போஸ்டர் அடிப்பீங்க, அதை எங்கேயெல்லாம் ஒட்டுவீங்க என்கிற அளவுக்கு இன்வால்வ் ஆகிவிடுகிறாராம் பப்ளிசிடி விஷயத்தில். அத்தோடு விட்டால்கூட பொறுத்துக் கொள்ளலாம். அதையும் தாண்டி போகிறதாம் அட்டகாசம். அதெப்படி?
எந்த விழாவுக்கு போனாலும் இவர் வருவதற்கு ரெண்டு மணி நேரத்திற்கு முன்பாக அங்கு ஒரு கும்பல் அசெம்பிள் ஆகிறது. கையில் தயாராக வைத்திருக்கும் துணி பேனர்களை ஆங்காங்கே தொங்க விடுகிறார்கள் அவர்கள். அதில் மோகினியே வருக, முக்கனியே வருக என்று விதவிதமாக அலங்கார வார்த்தைகளை அச்சடித்து வைத்திருக்கிறார்களாம்.
தன்ஷிகா வந்து விட்டு போனதும், இவர்களும் அந்த துணி பேனர்களை அவிழ்த்துக் கொண்டு பின்னாடியே கிளம்பிவிடுகிறார்களாம். கருவாடோ, கமர்கட்டோ? பப்ளிசிடி இல்லேன்னா படியேறுவது கஷ்டம்.