Published On: Friday, August 26, 2011
தவம் செய்யும் மரம்

நாசுக்காக எமக்கொரு தினம்
விறகுக்காக எமை ஒடிக்கிறது சனம்...
சூழல் சமநிலை பேணுகிறோம் நாங்கள்
பிதற்றிக் கொள்கிறது விஞ்ஞான உலகம்
மிருகங்களின் இயந்திரங்களில் அரைபட்டும்
எமக்கு சுரணை வரவில்லை
சுயநலமுள்ள மனிதர்களில்லையே - நாங்கள்
வெறும் மரமட்டைகள்தானே..!
வெயிலுக்கு உறைக்கும்போது மட்டும்
நாம் தேவை - உயிரோடு
எம் பசுங்குருதியை மட்டும் தேவை
சுகபோக வாழ்விற்க்கு...
மாடமாளிகைகளுக்கு தேவை நாங்கள்
உயிரற்ற ஜடங்களாக...
மழைக்காக மல்லுக்கட்டுகிறது
மனித சமுதாயம்...
அதற்கு நாங்கள் ஜீரணிக்கவேண்டும்
மனிதர்கள் ஏன் எங்களைப் புறக்கணிக்க வேண்டும்???
நாம் நமக்காக வாழ்வதில்லை
சாவதற்காக வாழ்கிறோம்...
மனித கல்லறைகளுக்குக்கூட-நாம்
மனிதாபிமான உதவிகளைச் செய்கிறோம்
எங்களை அழகாக இருக்கவிடுவதில்லை
இந்த மகளிர் கூட்டம்
உன்னழகைவிட என்னழகு மிகையானது
என்கின்ற பெண்ணில் கூந்தலில்
பவ்வியமாக இருக்கிறது-மல்லிகை
பெண்ணின் பெயர்தொட்டு
கல்லறை சமாதிகள் வரை
எம் வாழ்வு மனிதர்களுக்கு சமர்ப்பணம்
மனிதன் எமக்கு எமனாக இருந்தாலும்கூட...
- முஹம்மட் பிறவ்ஸ்