Published On: Friday, August 26, 2011
உறங்காத ராத்திரிகள்

சத்தங்கள் மடிசாய்ந்து போகும் நேரத்தில்
வாய்ப்பூட்டு மத்திய மௌனிகளகாவும்
நிம்மதியின் இலக்கணம் தேடிய
ஆணவம் மாய்ந்துபோன மனிதனாகவும்
தலையணையுடன் கட்டில்களில்...
திரையிட்டு மூடி வைத்தாலும்
கட்டணமில்லா கனவுகளும்,
தற்காளிகமாக மரணமும் - என்றும்
சங்கமித்தே போகின்றன.
அம்பலத்தில் பாத்திரமேற்காதவர் கூட
ஒத்திகையின்றி ஒய்யாரமாக...
கனவு நாடக மேடையில்
வேடம் பூண்டு நடிகர்களாகின்றனர்.
தீட்டி வைத்த கற்பனைகளும்
வெறுத்துப் போன வேலைகளும்
இழந்துவிட்ட நிம்மதியும்
வருவாய்கெட்ட கடன்களும்
பெட்டிப் பாம்புகளாக...
குருட்டு இரவுதனில்
அனைவரும் தூக்க மேடைகளில்
இரவுகள் மட்டும் தூங்காமல்
தூக்க மாத்திரைகளோடு.....
நன்றி: தினகரன் வாரமஞ்சரி (செந்தூரம்)