Published On: Tuesday, September 06, 2011
இன்று சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் பரீட்சிப்பு

நாடு முழுவதிலுமுள்ள 52 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களும் இன்று செவ்வாய்க்கிழமை பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் ஏ.எம்.எம்.கசீர் தெரிவித்தார். இக்கோபுரங்கள் எச்சரிக்கை ஒலி எழுப்பும்போது மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லையென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கோபுரத்தின் முன்னெச்சரிக்கை அலாரம் பரீட்சிக்கப்படுகின்றது. மக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை என ஒலிபெருக்கிகள் மூலமாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது மக்கள் சுனாமி அச்சம் நீங்கி வாழ்ந்துவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.