Published On: Wednesday, September 28, 2011
உயிருடன் சவக்கிடங்கில் இருக்கும் தாய்

பிரேசில் நாட்டில் ஒரு மருத்துவ தாதியும் வைத்தியர் ஒருவரும் இறந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் Rosa Celestrino de Assis எனப்படும் பெண்ணை சவச்சாலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள். இப்பெண் நியுமோனியாவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அப்பெண் சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டாள்.
ஆனால், அவர்ருடைய AFP அறிக்கையில் இறந்ததாக குறிப்பிடப்படவில்லை. அசோசியேட்டட் பிரஸ் செய்தியின்படி, அவரது மகள்மாரான Rosangela Celestrino, Celestrino de Assis இருவரும் கடைசி நேரத்தில் தனது தாயைப் பார்த்துவிட்டுச் சென்றதாக பிரேசில் பத்திரிகை ஒன்றுக்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதேவேளை, Rosa Celestrino ஏற்கனவே சவக்கிடங்கிலுள்ள குளிர்சாதனப் பெட்டியில் இருந்தபோதுதான் மகள்மார் பார்த்தாக சி.பி.எஸ். நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சி.பி.எஸ். நியூஸ் அறிக்கையின்படி ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்திருந்து 2 மணி நேரத்தின் பின்னரே சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
ஏ.பி.சி. நியூஸ் இன்படி, Celestrino de Assis இறந்துவிட்டதாக அறிவித்த வைத்தியர் தனது வேலையை இராஜினாமா செய்துவிட்டார். ஆரம்பத்தில் முக்கிய அறிகுறிகள் ஏதும் தென்படுகிறதா என சோதிக்காமையால் அந்த மருத்துவ தாதியும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
உயிருடன் இருப்பவரை சவக்கிடங்குக்கு அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல. இந்த வருடம் ஜூலையில், தென்னாபிரிக்காவில் இதேபோன்று சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தார். அம்மனிதன் 21 மணிநேரத்தின் பின்னர் தன்னைப் பூட்டிவைத்திருந்த குளிர்சாதன பெட்டியிலிருந்து எழுந்துள்ளார். சவக்கிடங்கில் பணிபுரியும் தொழிலாளர்கள் பேய் என்று கூச்சலிட்டுக் கத்தியுள்ளனர்.