எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, September 09, 2011

கணணி மூலம் இலவச SMS அனுப்பும் சேவை

Print Friendly and PDF


இலவசமாக குறுந்தகவல் அனுப்ப இணையத்தில் இருக்கும் ஒரு தளம் தான் Way2sms.com. இதைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும்.
இந்த தளத்தில் சென்று Signup/Register செய்து கொள்ள வேண்டும். இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி, கையடக்கத் தொலைபேசி எண் போன்றவற்றைக் கொடுக்கவேண்டும். பின்னர் உங்கள் கணக்கை உறுதிப்படுத்த மொபைலுக்கு ரகசிய எண் அனுப்புவார்கள். அதைக் கொடுத்தால் உங்கள் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.

பின்னர் இந்த தளத்திலேயே சென்று யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக SMS அனுப்பலாம். இத்தளத்தில் அதிகமாக இடம் முழுவதும் நிறைக்கிற மாதிரி விளம்பரங்கள் காணப்படுவதால் உங்களுக்கு எரிச்சலாக இருக்கும்.

அது மட்டுமின்றி அந்த தளத்தில் நுழையாமலே SMS அனுப்புகிற மாதிரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதற்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

இதைப் பயன்படுத்த நெட் வசதி இருந்தால் போதும். இந்த மென்பொருளை ஓப்பன் செய்து அதில் உங்களுடைய Way2sms கணக்கின் username/ Mobile no மற்றும் Password கொடுத்தால் போதும். கனெக்ட் ஆகிவிடும். பின்னர் நீங்கள் அந்த தளத்திற்கு செல்லாமலே டெஸ்க்டாப்பில் இருந்து கொண்டே யாருக்கு வேண்டுமானலும் இலவசமாக SMS அனுப்பலாம்.


இதில் 140 எழுத்துகளுக்குள் அனுப்பலாம். ஒரே நேரத்தில் பல பேருக்கு அனுப்ப வேண்டுமெனில் ஒவ்வொரு நம்பரையும் Semicolon(;) போட்டு பயன்படுத்தவும். மேலும் இந்த மென்பொருளிலேயே நண்பர்களின் மொபைல் எண்களைச் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.இதனால் எளிமையாகவும் வேகமாகவும் நண்பர்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பலாம்.

இதைப் பயன்படுத்த கணணியில் மைக்ரோசாப்டின் டாட் நெட் சப்போர்ட் இருக்க வேண்டும். விண்டோஸ் 7 பயன்படுத்துவர்களுக்கு டாட் நெட் வசதி அதிலேயே இருக்கும்.

தரவிறக்கச் சுட்டி: http://www.ziddu.com/download/16317102/Way2SSMSDesktopClient.exe.html

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452