Published On: Tuesday, September 27, 2011
உலகில் மிகச்சிறிய டிஜிட்டல் கமெரா

உலகில் மிகச் சிறிய கமெரா விரல் நுனியளவு மிகவும் சிறியதாக உருவாக்கப் பட்டள்ளது. இதனால் 2 மெகா பிக்ஸல் அளவுடைய புகைப் படங்களையும் வீடியோக்களையும் எடுக்கமுடியும். இது 1 அங்குலம் அளவுடையது. இதன் எடை அரை அவுன்ஸ் மட்டுமே. விலை £ 65. இதனைப் பயன்படுத்த சில்லறை விற்பனையாளர்கள் அதீத ஆர்வம் காட்டுகின்றனர்.
பேச்சாளர் ஒருவர் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது; மனித விரலினால் கமெராவின் ஷட்டர் பொத்தானை ஒரு தடவை தொடுவதன் மூலம் ஒரு புகைப்படத்தை எடுக்கமுடியும். உலகின் மிகச்சிறிய கமெரா ஒரு பளிங்கைவிட சற்று பெரியது என்றாலும், அதன் படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் மிகப்பெரிய கமெராக்களில் எடுப்பது போலத் தோன்றுகிறது.
இதன் பிளஸ் தன்னியக்கமுடையது. இதன் புகைப்படங்கள் 640 x 480 பிக்ஸல் (Resolution) உடையது. இதன் வீடியோ ஒரு செக்கனுக்கு 30 பிரேம்கள் கொண்டது. 1600 x 1200 அளவுடைய AVI வீடியோக்களையும் இதனால் பதிவுசெய்ய முடியும். இதனால் பிடிக்கப்படும் JPEG புகைப்படங்கள் 2 MP அளவுடையது. இதில் 2 GB அளவுடைய மெமரி கார்டைப் பொருத்தி அதில் புகைப்படங்களையும, வீடியோக்களையும் சேமிக்க முடியும். இதன் ரீசார்ஜ் பெற்றி 30 நிமிடங்கள் வரை செயற்படக்கூடியது.