Published On: Saturday, October 22, 2011
இந்திய அணி ஹெட்ரிக் தொடர் வெற்றி

இங்கிலாந்திற்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம், தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதன்மூலம், இங்கிலாந்து மண்ணில் பெற்ற மரண அடிக்குப் பழிதீர்த்துள்ளது. மொகாலியில் நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி இலக்காக 299 ரன்களை நிர்ணயித்தது. இப்போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இந்த தொடர், இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் பெற்ற படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைய வேண்டும் என்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய அணி 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டில்லியில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.