Published On: Thursday, October 06, 2011
உள்ளுராட்சி தேர்தலுக்கு விஞ்ஞாபனம்

நிலமை தலைகீழாக மாறியுள்ளது. வெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒன்றுக்காக பல இலட்சங்கள் செலவுசெய்து கிழக்கு மாணாகணத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரித்து வெளியிடும் அளவுக்கு என்னதான் அங்குள்ளது. அரசு மந்திரமார், எம்.பி.மார் மாகாண அமைச்சர்கள் என பட்டாளமிருக்கும் நிலையில் ஆட்சியமைத்து எதனை சாதிக்கப்போகிறது இந்த விஞ்ஞாபனம். இந்தப் பணத்தில் குறைந்தது சுனாமியால் வாழ்விழந்து போன குடும்பத்திற்கு 10 வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கலாம் என அப்பிராந்திய மக்கள் கூறுகின்றனர். கிழக்கின் வெற்றிலை முகத்தை திருப்பிவிடவா போகிறார்கள்?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியதை இவர்கள் மறந்துவிட்டா வாக்குறுதியளிக்கின்றார்கள். "உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் அளிக்கின்ற வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றமாட்டோம். அவர்கள் வாக்குகளைப் பெறுவதற்காகவே இவ்வாறு கூறுகின்றார்கள். இதில் எந்தவிதமான உண்மைத் தன்மையும் இல்லை" என்று ஜனாதிபதி சென்ற உள்ளூராட்சித் தேர்தலில் கூறியது இப்போதாவது ஞாபகம் வருகின்றதா?
இதைவிடுத்து தற்போது பேஸ்புக் வழியாகவும் ஏராளமான உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வேட்பாளர்களே நமக்கு நட்புக் கோரிக்கை விடுக்கின்றனர். சாக்கடை அரசியலை அதிலும் கொண்டுவந்து நாரடித்துவிட்டனர். அத்துடன் இனந்தெரியாத இலக்கங்களில் இருந்தும் எஸ்.எம்.எஸ். அனுப்புகின்றனர், குறிப்பிட்ட வாக்காளருக்கு வோட்டுப் போடுமாறு. எங்கேபோய் முடியும் இந்த அரசியல் விளையாட்டுக்கள்...?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து என்னை வெளியேற்ற பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தலைமையில் மறைமுக குழுவொன்று செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார். இதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் ஹரீஸ் எம்.பி. குறிப்பிட்டுள்ளார். கல்முனையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் கல்முனை மாநகர உள்ளுராட்சி தேர்தலில் குறைவான வாக்குகளை நிசாம் காரியப்பர் பெற்றாலும் அவரை மாநகர சபையின் மேயராக நிசாம் காரியப்பரை நியமிக்க ரவூப் ஹக்கீம் முயற்சிப்பதாகவும், இருந்தபோதும் கட்சிக்குள் அதற்கு கடும் எதிர்ப்பு காணப்படுவதாக கூறப்படும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸில் மற்றுமொரு முரண்பாடு தோன்றலாமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேவேளை எதிர்வரும் கல்முனை மாநகர உள்ளுராட்சி தேர்தலில் குறைவான வாக்குகளை நிசாம் காரியப்பர் பெற்றாலும் அவரை மாநகர சபையின் மேயராக நிசாம் காரியப்பரை நியமிக்க ரவூப் ஹக்கீம் முயற்சிப்பதாகவும், இருந்தபோதும் கட்சிக்குள் அதற்கு கடும் எதிர்ப்பு காணப்படுவதாக கூறப்படும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸில் மற்றுமொரு முரண்பாடு தோன்றலாமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.