Published On: Tuesday, November 22, 2011
சமூர்த்தி குடும்பங்களுக்கு கணனி பயிற்சி
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
கிழக்கு மாகாண மக்களின் கணனி அறிவைமேம்படுத்தும் நோக்குடன் ICTA நிறுவனம் இலங்கை சமூர்த்தி அதிகாரசபை மற்றும் கல்வித் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து 50 ஆயிரம் மக்களுக்கு அடிப்படை கணனி அறிவை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சமூர்த்தி நலனுதவிக் குடும்பங்களை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி தற்போது அங்கிகரிக்கப்பட்டுள்ள கணனி மையங்கள் தொழில் நுட்பக் கல்லூரிகள் மூலமாக 4 மணிநேர பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் சம்மாந்துறை பிரதேசத்தில் 7ஆவது தொகுதியினருக்கான பயிற்சிகள் இன்று சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெறுகின்றது ஒரு தொகுதியில் 5 பயிற்ச்சியாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் பங்கு கொள்ளும் 50 ஆயிரம் பயிற்ச்சியாளர்களிலில் 20 ஆயிரம் பேர் சமூர்த்தி குடும்பத்திலிருந்தும், ஏனைய 30 ஆயிரம் பேர் பாடசாலைகள் மூலமாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இவர்களுக்கு முதற்கட்டமாக அடிப்படை கணனி அறிவை பெற்றுக் கொடுப்பதற்காகவே இந் நான்கு மணிநேர பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன இதற்காக ICTA நிறுவனம் குறித்த பயிற்சி வழங்கும் நிறுவனத்துக்கு ஒருவருக்கு 675/- ரூபாவினை வவுச்சர் நடைமுறை மூலம் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும், இத்திட்டத்துக்கு தெரிவு செய்யப்படுபவர்களின் அடிப்படை தகைமைகளாக 15 வயது தொடக்கம் 45வயதுக்குட்பட்டிருத்தல், கணனி தொடர்பாக எந்தவித அடிப்படை அறிவையும் பெறாதவர்களே இப்பயிற்ச்சியில் இணைக்கப்பட்டுள்ளனர்.