எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, November 23, 2011

ஆபாசமாக நடந்து கொண்டவருக்கு பிணை

Print Friendly and PDF


(கலாநெஞ்சன்) 
இரவு வேளைகளில் வாகனம் ஒன்றில் அமர்ந்திருந்த தாயையும் மகளையும் வாகனத்திலிருந்து வெளியே வரவழைப்பதற்காக ஆபாசமான முறையில் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரை, நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு பிட்டிபனை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார். வழக்கின் முறைப்பாட்டாளரான பெண் சம்பவம் இடம் பெற்ற தினத்தன்று இரவு 12.30 மணியளவில் தனது கணவன் வரும் வரையில் நீர்கொழும்பு மாரிஸ் டெல்லா கல்லூரி முன்பாக தனது வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார்.

சந்தேக நபர் அந்த வாகனம் அருகில் வந்து வாகனத்தின்மீது தட்டி அந்தப்பெண்ணிடமும் அவரது மகளிடமும் கைகளால் சைகை செய்து, தனது உடம்பின் சில பகுதிகளை திறந்து காட்டியுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது .
முறைப்பாட்டாளரான பெண் கொப்பரா சந்தியில் கடமையிலிருந்த பொலிஸாரிடம் இது தொடர்பாக தெரிவித்துள்ளார். பின்னர் சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்தபோது இருவரும் சந்தேக நபரை அடையாளம் காட்டியுள்ளனர்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452