Published On: Thursday, March 08, 2012
அல்போன்சாவும், அவரது காதல் குழப்பங்களும்


அல்போன்சா காதல் குழப்பத்தில் சிக்கியிருப்பது இது முதல் முறையல்ல, 3வது முறையாகும். இதில் 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்று மீண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னக்கிளி செல்வராஜ் மூலம் கதாநாயகியாகத்தான் தமிழ் சினிமாவுக்குள் வந்தார் அல்போன்சா. இவரது தந்தை பெயர் ஆண்டனி. இவர் ஒரு டான்சர். தாயார் பெயர் ஓமனா. இரண்டு அண்ணன்கள், ராபர்ட் என்கிற தம்பி அல்போன்சாவுக்கு உண்டு. வீட்டில் இவர் ஒரே பெண் என்பதால் செல்லம் ஜாஸ்தி. கேரளாவிலிருந்து வந்தவர் என்பதால் தமிழ் சினிமாவில் பட்டுக்கம்பளம் போட்டுத்தான் வரவேற்றார்கள். ஆனால் ரசிகர்கள் அல்போன்சாவை கதாநாயகியாக ரசிக்கவில்லை. அதையும் தாண்டி அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்த கவர்ச்சிதான் மேலோங்கி தெரிந்தது. இதனால் அவர் கவர்ச்சி நாயகியாக மாறினார்.
பாட்ஷா படத்தில் அவர் பாடிய கவர்ச்சிகரமான பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவே அவருக்கு பெரும் பிரேக்காகவும் அமைந்தது. அதன் பின்னர் அல்போன்சாவின் கவர்ச்சி நடனத்துக்கு கூட்டம் சேர்ந்தது, அவரும் பிசியாக ஆடிக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் அவருக்கும் சாகர் என்ற நடிகருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் இந்த காதல் படு வேகமாக காலியாகிப் போனது. சாகர் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு ஒதுங்கினார். ஆனால் இந்த நிராகரிப்பால் அதிர்ந்தும், ஏமாந்தும் போன அல்போன்சா, தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.
இந்த நேரத்தில்தான் அல்போன்சாவின் தம்பி ராபர்ட் தலையெடுத்தார், டான்ஸ் மாஸ்டரானார். அல்போன்சாவும் மெதுவாக கிரேஸ் குறைந்து படங்களிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தார். நோபள் என்பவரைக் கல்யாணம் செய்து கொண்டார். குழந்தையும் பிறந்தது.
இந்தத் திருமண வாழ்க்கை சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, நோபளுக்கும், அவருக்கும் பிரச்சினை வெடித்தது. அதற்குக் காரணம், வினோத்குமார் மீது அல்போன்சாவின் பார்வை படர்ந்ததே என்கிறார்கள். வினோத்குமாருடன் அல்போன்சா நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் வெகுண்ட நோபள், தனது மனைவியையும், மகளையும் விட்டு விட்டு துபாய் போய் விட்டார். அது அல்போன்சாவுக்கு வசதியாகிப் போய் விட்டது.
விருகம்பாக்கத்தில் பிளாட்டை வாடகைக்குப் பிடித்து அங்கு வினோத்துடன் குடும்பமே நடத்த ஆரம்பித்து விட்டார். அல்போன்சாவுடன் இணைந்தது முதல் தனது குடும்பத்தினரைக் கூட மறந்து விட்டார் வினோத்குமார். இப்படியாக இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.
இந்த செயலை இருவரது வீட்டாரும் ஆரம்பத்திலேயே கண்டித்து சரி செய்திருந்தால் ஒரு உயிர் பறி போயிருக்காது. ஆனால் அதைச் செய்யாமல் ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் அல்போன்சாவும், வினோத்குமாரும் தங்கள் இஷ்டத்திற்கு நடந்து கொண்டு இப்படி ஒரு உயிரைப் பறி கொடுக்க நேரிட்டுள்ளது.
தற்போது போலீஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் அல்போன்சா. இதில் என்ன விசேஷம் என்றால், முதல் முறையாக அவர் தற்கொலைக்கு முயன்று எந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரோ, அங்கேயேதான் தற்போதும் அனுமதிக்கப்பட்டுள்ளார்!