Published On: Thursday, March 08, 2012
உதைப்பந்தாட்ட போட்டியில் புத்தளம் ஸாஹிரா அணி சம்பியன்
(புத்தளம் செய்தியளர்)
புத்தளம் வடக்கு கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான 15 மற்றும் 17 வயதின் கீழ்பட்டோருக்கான உதைப்பந்தாட்ட போட்டிகளில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை அணிகள் சம்பியன் அணியாக தெரிவாகின. வெட்டாளை அஸன் குத்தூஸ் பாடசாலை அணிகள் ரன்னர்-அப் அணியாக தெரிவாகின. இரு பிரிவிலும் இறுதிப்போட்டியில் இரு பாடசாலை அணிகளும் விளையாடின. ஸாஹிரா அணி இரு இறுதிப் போட்டியிலும் 1:0 என்ற கோல் அடிப்படையில் அஸன் குத்தூஸ் பாடசாலை அணியை வெற்றி கொண்டது. ஸாஹிரா பாடசாலை மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றன.

ஸாஹிரா தேசிய பாடசாலை அணி
அஸன் குத்தூஸ் அணி





