Published On: Thursday, March 08, 2012
கஹவத்தை இரட்டைக் கொலை சந்தேக நபர்கள் மூவர் கைது


கஹவத்தை இரட்டைக் கொலை சம்பவம் குறித்து மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2 ஆண்கள், ஒரு பெண் உட்பட மூவர் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கஹவத்தை, கொட்டகேதன்ன பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய தாய், 18 வயதுடைய மகள் ஆகியோர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டனர்.